|
இரண்டு நாடுகளுக்கிடையே பெரும் போர் நடந்துகொண்டிருந்தது. நாட்டு மக்கள் எல்லோரும் பெரும் பயத்துடனும் கவலையுடனும் இருந்தார்கள். ஒரு துறவி மட்டும் மிக மிக அமைதியாக இருந்தார். ஆச்சரியமடைந்த மக்கள், எப்படி உங்களால் அமைதியாக இருக்க முடிகிறது? என்று கேட்டார்கள். போர் இல்லாமல் அமைதியான காலத்தில் நம்மைப் பாதுகாத்தவர் யார்? கடவுள் தானே? அதே கடவுள் இப்போதும் நம்மைக் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. கடவுள் மாறவில்லை! நாம் மட்டும் ஏன் மாற வேண்டும்? அமைதியாகச் சொன்னார் துறவி.
|
|
|
|