|
ஒரு நாட்டில் இரு பிரிவினரிடையே கலகம் ஏற்பட்டது. மகான் ஒருவர் இரு தரப்பினரின் ஒற்றுமைக்காக அரும்பாடு பட்டார். அவர் எடுத்துக் கொண்ட பல்வேறு முயற்சிகளைக் கண்டு இரு பிரிவினருமே அவரைத் திட்டினார்கள். இருப்பினும் மகான் தன் சமாதான முயற்சியைத் தொடர்ந்து மேற்கொண்டார். இரு தரப்பினருமே கேட்டார்கள். நாங்கள் திட்டிக் கொண்டிருக்கிறோம். நீங்கள் கண்டு கொள்ளவே இல்லையே? புன்னகையுடன் மகான் சொன்னார், நீங்கள் இருவரும் என்னைத் திட்டுவதிலாவது ஒற்றுமையாய் இருக்கிறீர்களே! |
|
|
|