|
மன்னர் ஒருவர் தன் வெற்றியைக் கொண்டாட ஒரு முனிவருக்கும் அழைப்பு விடுத்தார். சீடர்களுடன் பதஞ்சலி முனிவரும் வந்தார். எல்லாம் முடிந்து சீடர்களுடன் செல்லும் வழியில், குருவே, புலனடக்கம் பற்றி எங்களுக்கு உபதேசிக்கும் தாங்களே, எங்களை இங்கு அழைத்து வந்தது சரிதானா? என்று ஒரு சீடன் கேட்டான். மகனே, புலனடக்கம் என்பது காட்டுக்குள் ஒடுங்கிக்கிடப்பதல்ல. மனதிற்கு சோதனை வைக்கும் இது போன்ற நிகழ்ச்சிகளை எதிர் கொண்டாலும் அவற்றுக்கு அடிமையாகாமல் இருப்பதே புலனடக்கம். மன அடக்கம்தான் அனைத்திலும் பெரியது என்று குரு கூற, தெளிவு பெற்றான் சீடன். |
|
|
|