|
துறவி ஒருவரிடம் வந்த ஓர் இல்லறவாசி, ஐயா! நெருங்கிய உறவினர்கள் வீட்டு விருந்துக்குச் செல்கிறேன்.. எத்தனை நாட்கள் தங்கி வரவேண்டும்? என்று கேட்டான். அதற்கு துறவி புன்னகை பூத்தபடி, உனக்கு அளிக்கப்படும் சாப்பாட்டில் எப்போது உன் முகம் தெரிகிறதோ... அப்போது அங்கிருந்து புறப்பட்டு விடு! என்றார். அவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. குருவே! உணவில் எப்படி முகம் தெரியும்? என்று தயங்கினான். நீ போ! உனக்கே தெரியும்! என்றார் துறவி. குழப்பமுடன் விருந்துக்குச் சென்றான். முதல் நாள் விருந்து தடபுடலாக நடந்தது. அயிட்டங்கள் அதிகம். இரண்டாம் நாள் வேகம் குறைந்திருந்தது. மூன்றாம்நாள் காலையில் சாப்பிட அமர்ந்ததும், தண்ணீர் ஊற்றின பழையசோறு வைக்கப்பட்டிருந்தது. குனிந்து பார்த்தான். தண்ணீரில் அவன் முகம் தெரிந்தது. இப்போது துறவி சொன்னது நினைவிற்கு வந்தது. உணர்ந்தவன் உடனே வீடு திரும்பினான்.
|
|
|
|