Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » கவலையை மாற்றும் மருந்து!
 
பக்தி கதைகள்
கவலையை மாற்றும் மருந்து!

அர்ஜுனன் கிருஷ்ணனின் மைத்துனன். அவர்கள் இருவரும் உறவினர்கள் மட்டுமல்ல! உயிர் நண்பர்களும் கூட. குரு÷க்ஷத்திர யுத்தம் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த வேளை! போர்க்களத்தில் கேள்வி கேட்பதற்கோ, விரிவான விளக்கம் அளிப்பதற்கோ நேரமே இல்லை என்ற நிலை! இருந்தாலும் மைத்துனனின் மனசஞ்சலத்தைப் போக்க பகவான் கிருஷ்ணர் கீதையைப் போதித்து வெற்றி பெற்றார். இதற்காக, கிருஷ்ணர் தன்னுடைய தெய்வீக ஆற்றலைப் பயன்படுத்தி அர்ஜுனனை மாற்றவில்லை. மாறாக, அவனது கவலையை மாற்றும் மருந்தைத் தந்து என்ன என்பது பற்றி கீதையில் கூறுகிறார்.

அர்ஜுனா! நீ என் மைத்துனன் என்ற உறவு மட்டுமல்ல! நல்ல நண்பனுமாக இருக்கிறாய்! நான் உனக்குத் தேரோட்டும் அளவுக்கு நெருக்கமாக இருக்கிறேன். இருந்தாலும் உன்னிடம் இருக்கும் அஞ்ஞானத்தால் போர்புரியாமல் காண்டீபத்தை (அர்ஜுனனின் வில்) கீழே போட்டுவிட்டு மனம் வருந்துகிறாய். அஞ்ஞானத்தை உன் முயற்சியாலே போக்கவேண்டும். அசத்தியத்தை அவரவர் சொந்த முயற்சியாலேயே வெல்ல வேண்டும். அப்போது கிடைக்கும் சத்தியஞானம் தான் நிரந்தர பொக்கிஷம். அப்போது மனவலிமையும், சக்தியும் உண்டாகும். அந்த ஞானத்தால் புரட்சிகரமான நல்ல மாறுதல் உண்டாகும். அதுபோல மனதில் உண்டாகும் அஞ்ஞானமாகிய அறியாமையை போக்க நாம் தான் முயற்சி எடுக்க வேண்டும், என்றார். உடனே அர்ஜுனன் வில்லை எடுத்தான். எதிரிகளைச் சாய்த்தான். நீங்களும் மனசஞ்சலமான நேரத்தில் கீதையைப் படியுங்கள். வாழ்க்கை என்றால் என்ன என்பதை உணர்ந்து கொள்வீர்கள். மனதில் தைரியம் தானாகவே வரும். நம் செயல்பாடுகளும் சிறப்பாக அமையும்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar