Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » பொறுமையே கல்வி!
 
பக்தி கதைகள்
பொறுமையே கல்வி!

வாசுதேவன் என்ற பக்தன் கல்வியில் சிறப்புற்று திகழ்ந்தான். அகராதியைக் கரைத்துக் குடித்திருந்தான். எந்தச் சொல்லுக்கும் இவனுக்கு அர்த்தம் தெரியும். தமிழ் நீங்கலாக பிறமொழிகள் சிலவற்றை எழுதவும் பேசவும் தெரிந்து வைத்திருந்தான். ஆனால், இவ்வளவு படித்திருக்கிறோமே என்ற கர்வம் துளியளவும் அவனுக்கு கிடையாது. கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவு என்பது அவனது தாரக மந்திரம். ஒருமுறை, அவன் அருகிலுள்ள ஊரில் நடந்த தன் உறவினர் இல்லத் திருமணத்துக்குப் புறப்பட்டான். பட்டு வேட்டி, சட்டை பளபளவென மினுமினுத்தது. செல்லும் வழியில், சிலர் சாணத்தை ஒருவர் மீது ஒருவர் வீசியெறிந்து சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். அது தவறுதலாக, வாசுதேவனின் உடலில் பட்டு விட்டது. வாசுதேவனுக்கு கடுமையான ஆத்திரம்! கற்ற கல்வியின் பயனே பொறுமை என்பதை மறந்து, அவன் அவர்களைத் திட்டித் தீர்த்தபடியே வீடு திரும்பி விட்டான். யார் ஒருவன் பொறுமையை இழக்கிறானே அவனை சரஸ்வதி நாடுவதில்லை. ஏனெனில், பொறுமையிழந்தவன் கடும் சொற்களைப் பேசுகிறான். கடுஞ்சொல் பேசுபவனுக்கும், கலைவாணிக்கும் ஆகவே ஆகாது.

அவள் அவனை விட்டு சொல்லாமலே பிரிந்தாள். அதன் பிறகு அவன் வாழ்வில் எது நடந்தாலும் கோபப்பட ஆரம்பித்தான். கல்விநாயகி ஒருவனிடமிருந்து பிரிந்து விட்டால் ஒழுக்கம் போய் விடும். ஒருநாள், அவன் உடலில் இருந்து ஒரு ஒளி வெளிப்பட்டது. அதனிடம், நீ யார்? என்று கேட்டான். நான் தான் ஒழுக்க தேவதை. கல்வியில்லாத இடத்தில் நான் குடியிருக்கமாட்டேன், செல்கிறேன், என்று சொல்லி அவனை விட்டு நீங்கியது. இதன் பிறகு, அவன் தன்னைச் சார்ந்தவர்கள் அறிவுரை சொன்னாலும் கூட, அவர்களிடம் சண்டைக்குப் போனான். குடி முதலான கெட்ட வழக்கங்களுக்கும் ஆளானான். ஒருநாள், மற்றொரு ஒளிதேவதை அவனிடமிருந்து வெளிப்பட்டது. நீ யார்? என்று அவன் கேட்டான். வாசுதேவா! நான் தர்மதேவதை. நேற்றுவரை நான் உனக்குச் சொந்தம். அதற்கு காரணம் உன்னிடமிருந்த ஒழுக்கம். ஒழுக்கமில்லாத இடத்தில் நான் வசிப்பதில்லை. புறப்படுகிறேன், என்று சொல்லிவிட்டு மறைந்து விட்டது. இதையடுத்து சில நாட்களில் மற்றொரு ஒளி தேவதை அவன்
உடலில் இருந்து கிளம்பியது. நீ யார்?என அவன் வழக்கம் போல் கேட்க, வாசுதேவா! நான் சத்திய தேவதை. உண்மை எனது உயிர்மூச்சு. தர்மதேவதை இல்லாத இடத்தில் நான் இருக்க மாட்டேன். போகட்டுமா? என்று சொல்லி கிளம்பிவிட்டது. அன்று முதல் அவன் பொய்யர் திலகமாகி விட்டான். எடுத்தற்கெல்லாம் பொய் சொல்பவனை யார் விரும்புவார்கள்? அவனைக் கண்டாலே ஊரார் ஓட்டம் பிடிக்க ஆரம்பித்து விட்டனர்.

ஒருநாள் ஒரு பேரொளி பெண் அவனிடமிருந்து வெளிப்பட்டாள்.  பெண்ணே! நீ யார்? என்று அவளிடம் கேட்டான். நான் திருமகள்! பொய்யர்களிடம் நான் தங்குவதில்லை. எனவே, படித்ததனால் நீ சேர்த்த பொருளும் இன்றோடு போய்விடும், என்று சொல்லிவிட்டுப் போய் விட்டாள். ஐயையோ! பொறுமையிழந்து ஒரு வார்த்தை பேசியதால் வந்த வினையைப் பாருங்களேன்! படிப்பதே பொறுமையாக இருப்பதற்காகத் தானே! படித்தவனே தெருவில் நின்று படிக்காதவனைப் போல கண்டதையும் பேசினால் நிலைமை இப்படியாகி விடுகிறதே! மனிதனின் வாழ்க்கைக்கு கல்வியே ஆணிவேர். அதே நேரம், கற்றவன் பொறுமையையும் கைக்கொள்ள வேண்டும்.  விரும்பத்தகாத பல நிகழ்வுகள் ஒருவனது வாழ்வில் நடப்பது சகஜம். ஒவ்வொன்றுக்கும் பொறுமையிழந்து கத்திக் கொண்டிருந்தால் அவனை யாரும் மதிக்கமாட்டார்கள். வாழ்வில் நடக்கும் நல்லதை மகிழ்வுடன் ஏற்பது போல, விரும்பத்தகாத நிகழ்வுகளையும் பொறுமையுடன் எதிர்கொள்ள சரஸ்வதி பூஜை நன்னாளில் உறுதியெடுப்போம்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar