Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » ஆலங்காட்டு காளி!
 
பக்தி கதைகள்
ஆலங்காட்டு காளி!

சுனந்த முனிவர் என்பவர் சிவலோகத்துக்கு வந்து, பெருமானே! பூலோகத்தில் உனது தலங்களில் உயர்ந்தது எது? எனக்கேட்டார். முனிவரே! நான் நடனம்புரியும் திருவாலாங்காடு என்னும் ஸ்தலம் மிகவும் உயர்ந்தது. அங்கு தங்கி என்னை வழிபட்டால், சிவலோகத்தில் நிரந்தரமாக இருக்கும் பாக்கியம் பெறலாம். அத்தலம் பிறவிப்பிணியை அறுக்கக்கூடியது, என்றார். இவர்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் போது, சிவனின் கழுத்தில் இருந்த கார்க்கோடகன் என்ற பாம்பு முனிவரைப் பார்த்து சீறியது. முனிவர் நடுங்கி சற்று பின்சென்றார். இதைக் கவனித்து விட்ட சிவன், நீ என் கழுத்தில் அணிகலனாய் இருந்த காரணத்தால் தானே, என்னைத் தேடி வந்த பக்தரை அவமானப்படுத்தினாய். நீ இனி இங்கு இருக்கக்கூடாது. போ பூலோகத்துக்கு, என விரட்டினார். நடுங்கிப் போன பாம்பு, பெருமானே! என் பிழை அறிந்தே செய்தது. உங்கள் கழுத்தில் இருந்த ஆணவத்தால் அப்படி செய்தேன். பூலோகம் சென்றால் கருடன் என்னைக் கொன்று விடுமே! எனக்கு கருணை காட்டுங்கள், எனக்கெஞ்சியது.
சிவனும் மனமிரங்கி,சரி! இந்த முனிவர் திருவாலங்காடு சென்று தவமியற்ற உள்ளார். இனி அங்கு சென்று இவருக்கு உதவி செய்து தவமிரு. உன்னை மீண்டும் அணிகலனாக்கிக் கொள்வேன், என்று சாபவிமோசனம் கொடுத்தனர். சுனந்தனரும், கார்க்கோடக பாம்பும் திருவாலங்காடு வந்து தவமிருந்தனர்.

இந்நேரத்தில், பூலோகத்தில் இருந்து தேவலோகத்துக்கு சும்பன், நிசும்பன் என்ற அசுரர்களால் அனுப்பப்பட்ட கொடிய வீரர்கள், தேவர்களை அடிமைப்படுத்தினர். அவர்களுக்கு கடும் துன்பம் செய்தனர். தேவர்கள் நடுங்கிப்போய் உமாதேவியாரை எண்ணி தவமிருந்தனர். அம்பாள் அவர்கள் முன்தோன்றி கருணையுடன் கோரிக்கையைக் கேட்டாள். அவளும் பூலோகத்திலுள்ள திருவாலங்காடு வந்து அந்த அசுரர்களை அழிக்கும் யுக்தி பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தாள். அப்போது சண்டன், முண்டன் என்ற அசுரர்கள் அங்கு தன் படைகளுடன் வந்தனர். அவர்கள் தவமியற்றிய அம்பாளின் அழகில் மயங்கினர். தங்களுடன் வருமாறு அவளை அழைத்தனர். லோகமாதாவான அவள் ஆத்திர மடைந்தாள். தன் உடலில் இருந்து ஒரு சக்தியைத் தோற்றுவித்து அவள் சண்ட முண்டரை அழித்தாள். அவர்களைஅழித்த சக்திக்கு சாமுண்டி என பெயர் சூட்டி அந்த தலத்திலேயே இருக்கும்படி உத்தரவிட்டாள். இதையறிந்த சும்ப நிசும்பர் ஆத்திரமடைந்தனர். ஒரு பெண்ணால் தங்கள் குலத்தினர் அழிந்ததை எண்ணி வெட்கமடைந்த அவர்கள் அம்பாளைக் கொல்ல வந்தனர். அவள் சப்தமாதர்களை உருவாக்கி, அவர்களைக் கொன்றாள். இதை சும்ப, நிசும்பரின்
தங்கையான குரோதி என்பவள் கேள்விப்பட்டாள். அவளது மகன் ரத்தபீசன். அவனை யாராவது தாக்கி ரத்தம் சிந்தினால், அந்த ரத்தத்துளிகளில் இருந்து பல்லாயிரம் அசுரர்கள் தோன்றும் சக்தி படைத்தவனாக இருந்தான். அவன் தேவியைக் கொல்ல வந்தபோது, சப்தமாதர்களின் சேனைகள் அவனை எதிர்த்தனர். அவன் உடலில் இருந்து சிந்திய ரத்தத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான அசுரர்கள் தோன்றி சப்தமாதர்களை விரட்டினர். அவர்கள் சக்தியைச் சரணடைந்து விஷயத்தைச் சொன்னார்கள்.

உடனே உமாதேவி, காளி என்னும் மாயசக்தியை உருவாக்கி, நீ ரத்தபீசனின் உடலில் இருந்து சிந்தும் ரத்தத்தை ஒரு கபாலத்தில் ஏந்தி குடித்து விடு. சொட்டு கூட கீழே விழக் கூடாது, என்றாள். காளியும் அவ்வாறே செய்ய ரத்தம் வற்றிப் போன ரத்தபீசன் இறந்து போனான். அதன்பிறகும் காளியின் ஆவேசம் அடங்கவில்லை. உடனே சிவன் பைரவராக உருவெடுத்து வந்து, காளியின் முன் தோன்றினார். ஆவேசத்தில் அவரையும் காளி எதிர்த்தாள். அவளுடன் நடனமாடி காளியை அடக்கி சாந்தப்படுத்தினார் சிவன். பின்னர் அங்கே தவமிருந்த சுனந்த முனிவருக்கும், கார்க்கோடகனுக்கும் காட்சியளித்து சிவலோக பதவி தந்தார். காளியை அந்த தலத்திலேயே தங்குமாறு அருள் செய்தார். கடுமையாக சேஷ்டை செய்து பெற்றோருக்கு மனக்கஷ்டத்தை ஏற்படுத்தும் குழந்தைகளை இங்கு அழைத்து வரலாம். அவர்கள் பெயரில் இந்தக் காளிக்கு அர்ச்சனை, அபிஷேகம் செய்தால் அவர்களின் சேஷ்டை அடங்கும். திருவாலங்காடு கோயில் கடலூர் மாவட்டத்தில் உள்ளது. இது நடராஜரின் பஞ்ச சபைகளில் ரத்னசபை என்பதும், முதல் சபை என்பதும் குறிப்பிடத் தக்கது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar