Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » காலத்துக்கேற்றதை பேசுங்க!
 
பக்தி கதைகள்
காலத்துக்கேற்றதை பேசுங்க!

ஒரு துறவி எப்போதும் வேதாந்தம் பேசிக்கொண்டிருப்பார். மக்களே! நீங்களும் தெய்வம், நானும் தெய்வம், இந்த நாயும் தெய்வம், பூனையும் தெய்வம், எல்லா ஜீவன்களையும் ஒன்று போல் பாருங்கள், என்றார். இதை காட்டில் விறகு வெட்டும் இளைஞன் ஒருவன் கேட்டுக் கொண்டிருந்தான். ஒருநாள், துறவி காட்டு வழியே வந்து கொண்டிருந்தார். யானை ஒன்று இவரை விரட்ட வரும் வழியில் இருந்த கிணற்றுக்குள் குதித்து விட்டார். தண்ணீரில் மூழ்க இருந்த நிலையில் கையில் கிடைத்த கல்லைப் பிடித்துக் கொண்டு அபயம்...அபயம்... யாராவது காப்பாற்றுங்களேன், என கதறினார். அந்த அபயக்குரல் அடிக்கடி இவரது பேச்சைக் கேட்கும் விறகு வெட்டும் இளைஞனின் காதில் விழுந்தது. அவன் கிணற்றில் இருந்து சற்று தூரத்தில் விறகு வெட்டிக் கொண்டிருந்தான். ஓடிவந்த அவன் கிணற்றில் கிடந்தவரைப் பார்த்து, நடந்ததைத் தெரிந்து கொண்டான்.

 சாமி! நாயும் தெய்வம், பூனையும் தெய்வம் என்றீர்கள்! இப்போது உங்களைத் துரத்தி வந்த யானையும் தெய்வம், நீங்களும் தெய்வம் தான்! தெய்வத்தைக் கண்டு தெய்வம் ஏன் ஓடியது? என்றான். நீ முதலில் என்னை வெளியே தூக்கு, விளக்கம் தருகிறேன், என்றார் துறவி. இளைஞன் அவரைக் கரை சேர்த்தான். அன்பனே! நான் சொன்னதில் தவறில்லை. யானையும் தெய்வம், நானும் தெய்வம், இந்தக் கிணறும் தெய்வம், நீயும் தெய்வம் தான். தெய்வத்தை ஒரு தெய்வம் விரட்டியது. இந்த தெய்வத்துக்குள் விழுந்தேன். தெய்வமாகிய நீ என்னைத் தூக்கினாய், என்றார். அப்படியா? என்ற இளைஞன் படீரென அவரை மீண்டும் கிணற்றுக்குள் தள்ளி விட்டான். சாமி! கிணறும் தெய்வம்! அதில் தள்ளிவிட்ட நானும் தெய்வம், நீங்களும் தெய்வம்.

தெய்வம் தெய்வத்துக்குள்ளேயே இருக்கட்டும், என்றான். அப்போது தான் அவருக்கு புத்தி வந்தது. அப்பனே! நான் தெய்வமல்ல, என்னைத் தூக்கி விடு, என்றார். இளைஞனும் தூக்கி விட்டான். சாமி! இனியாவது இப்படி வேதாந்தம் பேசிக்கொண்டு திரியாதீர். காலத்துக்கு தகுந்த அறிவுரையே இப்போது வேண்டும். உம் கருத்துப்படி என் கையிலுள்ள இந்த கோடரியும் தெய்வம் தான்! அதைக்கொண்டு உம் கையில் போட்டால் கை இருக்குமா! நான் மனிதாபி மானத்துடன் உம்மைக் காப்பாற்றினேன். இனியாவது, மனிதாபிமானம் போன்ற காலத்துக்கேற்ற கருத்துக்களை மக்களிடம் போதித்து வாரும், என்றான். சாமியார்கள் இனியாவது மக்களுக்கு புரிகிற மாதிரி, காலத்துக்கு தகுந்த மாதிரி அறிவுரைகளைச் சொன்னால் அவர்களுக்கு நன்மை பிறக்கும். சரிதானே!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar