Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » கடவுளின் கருணையை மறக்காதே!
 
பக்தி கதைகள்
கடவுளின் கருணையை மறக்காதே!

வழக்கமாக நூறு ரூபாய் கூலி பெறுபவனுக்கு, திடீரென ஒருநாள் ஆயிரம் ரூபாய் கிடைத்தால் போதும். ஆண்டவன் கண்ணைத் திறந்து விட்டான், கண்ணா! நீ வாழ்க! உன் புகழ் ஓங்கட்டும், என்பான். இவன் அதைச் சேர்த்து வைத்திருந்தால் ஆபத்துக்குப் பயன்படும். அந்தப் பணத்தை ஆடம்பரமாக செலவழித்து விட்டு, பத்துநாள் கழித்து, ஏதோ காரணத்தால் வேலை கிடைக்காமல் போவதாக வைத்துக் கொள்வோம். வீட்டில் அடுப்பு எரியாது. உடனே இவன் வயிறெரிந்து, ஏ கண்ணா! உனக்கு கண்ணிருக்கிறதா! என்னை ஏன் இப்படி கஷ்டப்படுத்துகிறாய்? நீ என் வீட்டில் இருக்கக்கூடாது, போ வெளியே,  என அவனது படத்தை வீசியெறிந்து உடைத்து விடுவான். அப்படியானால், ஒரு காலத்தில் கொடுத்ததைப் பற்றிய நன்றியை மறந்து விடுகிறான். இந்த நிலைமை ஒருமுறை கிருஷ்ணருக்கே ஏற்பட்டது. தேவலோகத் தலைவன் இந்திரன் நரகாசுரன் என்பவனால் கஷ்டப்பட்டான். அவன் பகவான் கிருஷ்ணரின் மகன். அவனை அழிக்க வழி தெரியவில்லை. கிருஷ்ணரிடமே முறையிட்டான். அவள் சத்யபாமா உதவியுடன் அவனை அழித்தார். இழந்த இந்திரலோகத்தை இந்திரன் கிருஷ்ணரால் பெற்றான். சொந்தமகனையே அழித்து அப்படி ஒரு நல்ல உதவியைச் செய்தார் கிருஷ்ணர்.

காலம் சென்றது. இந்திரன் இதையெல்லாம் மறந்து விட்டான். ஒருசமயம், பாற்கடலைக் கடைந்த போது வெளிப்பட்ட பாரிஜாதம் என்னும் நறுமண மலர் மரம் வெளிப்பட்டது. அந்த மலர்களை தேவலோகப் பெண்கள் சூடினர். நாரதர் முதலான முனிவர்களும் மாலையாக அணிந்து கொண்டனர். அதன் நறுமணத்தால் கவரப்பட்ட நாரதர், ஒரு மலர் மாலையைத் தொடுத்து கிருஷ்ணரிடம் கொண்டு வந்து கொடுத்து வணங்கினார். கிருஷ்ணர் அதை ருக்மிணிக்கு கொடுத்து விட்டு வெளியே சென்று விட்டார். அந்த சமயம் பார்த்து ருக்மிணியின் அரண்மனைக்கு வந்த சத்யபாமா, இந்த நறுமண மாலையைத் தந்தது யார்? எனக் கேட்க, என் கிருஷ்ணர் தான் என பதிலளித்தாள். சத்யபாமா கோபத்துடன் வீட்டுக்கு வந்து விட்டாள். ருக்மிணிக்கு மாலையைக் கொடுத்தவர், அதில் ஒரு பூவையாவது எனக்குத் தந்திருக்கலாமே! என புலம்பிய போது, நாரதர் அங்கே வந்தார். தன் வேலையை அங்கே காட்டிவிட்டார். சத்யபாமா! நீ கொடுத்து வைத்தது அவ்வளவு தான்! அந்தக் கிருஷ்ணர் இப்படித்தான்! ருக்மிணி மீது அவருக்கு ரொம்ப பாசம்! என்று அவர் சொல்லவே, எரிகிறகொள்ளியில் எண்ணெயை விட்ட கதையாகி விட்டது.

அவள் கொதித்துப் போயிருந்த நேரத்தில், கிருஷ்ணர் வந்தார். நடந்ததை அறிந்தார். நாரதா! நீ உனது வேலையைக் காட்டிவிட்டாயா? என கடிந்து கொண்டார்.  பாமா! அவளுக்கு மாலை தானே கொடுத்தேன். உனக்கு மரத்தையே தருகிறேன்,என்று சமாதானம் செய்தார். நாரதரிடம், நீ இந்திரனிடம் செல். தேவலோகத்தையே இந்திரனுக்கு பெற்றுத் தந்த எனக்காக அவன் எதையும் செய்வான். பாரிஜாத மரத்தை நான் கேட்டதாக பெற்று வா, எனச்சொல்லி அனுப்பினார். நாரதர் போய் மரத்தைக் கேட்கவே இந்திரன் மறுத்துவிட்டான். தேவலோக மரத்தைபூலோகத்துக்கு எப்படி தர முடியும்? அது முடியாது, என சொல்லி விட்டான். இந்த பதிலை நாரதர் கிருஷ்ணரிடம் சொல்லவே, நன்றி மறந்த இந்திரனுடன் போர் தொடுக்க
சக்கரத்துடன் கிளம்பி விட்டார் கிருஷ்ணர். தேவர்களையெல்லாம் விரட்டியபடியே இந்திரனின் அரண்மனையில் புகுந்தார். இந்திரலோகத்தையே உனக்களித்தேன். நீயோ ஒரு மரத்தை தர மறுத்தாய். இனி இந்த மரம் மட்டுமல்ல! இந்திரலோகமே எனக்குச் சொந்தம், என சக்கரத்தை விட இருந்த வேளையில், தேவர்களின் தந்தையான காஷ்யப முனிவர் தடுத்து சமாதானம் செய்தார். தன் மூத்த மகன் இந்திரன் நன்றி மறந்ததைக் கண்டித்தார். பாரிஜாத மரத்தை நாராயணனின் அம்சமான கிருஷ்ணரிடம் ஒப்படைக்கக் கூறினார். கிருஷ்ணரும் மரத்துடன் பூலோகம் வந்து சத்யபாமாவிடம் வழங்கினார். கடவுள் நமக்கு தந்த வாய்ப்பு வசதியை உயிருள்ளவரை மறக்கக் கூடாது. இடையிடையே வரும் சோதனைகளுக்காக அவரைத் திட்டக்கூடாது, புரிகிறதா!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar