|
ஆசிரமம் ஒன்றில் குரு ஒருவர் உடல்நலமின்றிக் கிடந்தார். அவரிடம் நிறைய சீடர்கள் இருந்தனர். அவர்களில் குருபக்தி நிறைந்த சீடன் ஒருவனும் அடக்கம். ஒரு நாள் குருவிடம் சுவாமி! தங்களுக்குப் பின் இந்த ஆசிரமத்தை யார் வழிநடத்தப்போகிறார்கள் என்பதை இன்னமும் ஏன் நீங்கள் அறிவிக்காமல் இருக்கிறீர்கள்? என பேராசை பிடித்த மூன்று சீடர்கள் கேட்டனர். அவர்கள் மனநிலையை அறிந்த குரு, நான் காசிக்குப் போய் கங்கா ஸ்நானம் செய்து முடித்த பின் சொல்கிறேன் என்றார். இது சாத்தியமா? என்றனர் மூன்று சீடர்களும். குரு பக்தி மிகுந்த சீடனை வரவழைத்த குரு, அதே ஆசையைச் சொல்ல, சுவாமி! இது நான் செய்த பாக்கியம், காசி வரை தங்களை சுமந்து செல்ல இறைவன் எனக்குக் கருணை காட்டியுள்ளார். எனக் கூறியவாறே, படுக்கையில் கிடந்த குருவை தூக்க முயன்றான் அவன். புன்னகைபுரிந்த குரு, மூன்று சீடர்களிடம் இப்போது சொல்லுங்கள்... தலைமைப் பொறுப்பை யாருக்குக் கொடுக்கலாம்? எனக் கேட்க, தலை கவிழ்ந்த மூவரும், தங்கள் சுட்டு விரலை குரு பக்திமிக்க சீடனை நோக்கிக் காட்டினர்.
|
|
|
|