|
குரு ஒருவரின் போதனை வகுப்பு முடிந்தவுடன் சீடர்கள் எல்லாம் கலைந்து செல்ல, ஒரு சீடன் மட்டும் குருவை வணங்கி நின்றான். உனக்கென்ன சந்தேகம்? என்று குரு கேட்க. முதலில் உன்னை நேசி. அப்போதுதான் மற்றவர்களை உங்களால் நேசிக்க முடியும் எனக் கூறினீர்கள். இதற்கான காரணம் எனக்குப் புரியவில்லை குருவே. தயவு செய்து இதற்கான விளக்கத்தை தாங்கள் எனக்குக் கூற வேண்டும் என்றான். நீ பிறர் மீது வெறுப்பாகவோ, கோபமாகவோ, எதிர்ப்பாகவோ இருக்கிறாய் என வைத்துக் கொள். அதனால் முதலில், பாதிக்கப்படுபவர் யார்? என்று கேட்டார் குரு. இதிலென்ன சந்தேகம். முதலில் பாதிக்கப்படுவது நானாகத்தான் இருக்க முடியும் என்றான் சீடன். சரியாகச் சிந்தித்திருக்கிறாய் உன் எதிர்மறைச் செயலால் முதன் முதலில் பாதிக்கப் படுவது உன் எதிரியல்ல. நீதான் அது போல உன்னிடம் நீ நல்ல எண்ணங்களையும் செயல்களையும் வளர்த்துக் கொண்டால், உன்னை நீ நேசித்தால், உன் மீதே நீ அன்பு செலுத்தினால், அவற்றையேதான் நீ பிறர் மீதும் செலுத்துவாய் என்பதை ஒப்புக் கொள்கிறாயா? என்றார் குரு. ஏற்றுக் கொள்கிறேன் குருவே என்றான் சீடன்.
|
|
|
|