|
பெருந்துறவி ஒருவர் அரசனது மரியாதையை ஏற்று பல்லக்கில் அரண்மனையை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். வழியில் அவரைக் கண்ட ஏழைக்குடியானவன் ஒருவன், துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு மரியாதை செலுத்தினான். துறவியும் பல்லக்கை விட்டு இறங்கி குடியானவனுக்குப் பதில் மரியாதை செலுத்தினார். அப்போது அரசன் துறவியிடம் நீங்களோ பெருந்துறவி, தவசீலர் அந்த ஏழை பிரஜைக்கு பதில் மரியாதை செலுத்த வேண்டுமா? என்று கேட்டார். துறவி புன்னகையுடன் என்னை விடவும் பணிவும் மரியாதையும் தெரிந்த ஒருவர் இருப்பதை நான் விரும்புவதில்லை என்றார்.
|
|
|
|