|
ஒரு ஆசிரமத்தில் உள்ள சீடர் ஒருவர் தனது மகானிடம், குருவே! கடவுள் ஏன் கொடிய விலங்குகளை படைத்தார்? என்று கேட்டார். உன்னைப் படைத்தது யார்? என்றார் மகான். கடவுள்தான்! எதற்காக என்று கூற முடியுமா? நான் ஏன் பிறந்தேன்? என்று சிந்தித்தபடி மவுனம் சாதித்தார் சீடன். கடவுள் என்ன நோக்கத்துடன் ஒவ்வொரு ஜீவனையும் படைக்கிறார் என்பதை நம்மால் அறிய முடியாது. படைப்பின் ரகசியங்களை ஆண்டவன் ஒருவனே அறிவான்! என்றார், மகான்.
|
|
|
|