மகான் ஒருவர் எப்போதும் இறை பக்தியில் திளைத்து இருப்பார். இறைவனுடன் பேசும் ஆற்றலும் அருளப் பெற்றார். அவரிடம் சீடர்கள் சிலர் இறைவனை அடைவது எப்படி? உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன? என்று கேட்டனர். நேரம் கிடைக்கும்போதெல்லாம் நான் இறைவழிபாடு செய்கிறேன். அவ்வாறு வழிபடாத சமயத்தில் இறைவனைப் பற்றிப் பேசுகிறேன். பேசாதபோது இறைவனைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன் என்றார் அந்த மகான்.
|