|
வேதாரண்யம் சிவாலயத்தில் எலியொன்று வசித்து வந்தது. கருவறை விளக்குகளில் தீபம் எரியத் துணைபுரியும் நெய்யே, அந்த எலியின் பசி நெருப்பை அணைக்கவும் உதவியது. ஒரு கார்த்திகைத் திருநாளில் நெய்யுண்ணச் சென்றது எலி. அப்போது தீபச்சுடர் மங்கி அணையும் நிலையிலிருந்தது. எலி நெய்யுண்ணும் முயற்சியில் திரி தூண்டப்பட்டு பிரகாசமாக எரிந்தது. அதனால் சிவன் சன்னதியில் விளக்கேற்றிய புண்ணியம் பெற்ற எலி, சிவனருளால் அடுத்த பிறவியில் மகாபலி சக்ரவர்த்தியாகப் பிறந்தது. நெய்தீபம் எரிய துணைபுரிந்த எலிக்கே இத்தனை பெரும் புண்ணியமெனில், சிவன்கோயிலில் நெய்தீபம் ஏற்றும் பக்தர்களுக்கு எத்தனை புண்ணியம்! |
|
|
|