Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » அன்னையின் அருள்!
 
பக்தி கதைகள்
அன்னையின் அருள்!

முகிலன் மீன் பிடித்து பிழைப்பவன். அவன் மனைவி அம்மு அம்மன் பக்தை. அவர்கள் வசித்த ஊரில் திருவிழா நடக்க இருந்தது. செலவுக்கு அதிக பணம் வேண்டும் என்பதால், முகிலன் கடும் உழைப்பில் ஈடுபட்டான். கடலுக்கு சென்ற கணவன் பத்திரமாக வீடு திரும்ப வேண்டும் என அம்பாளிடம் பிரார்த்திப்பாள். விழாவுக்கு ஒருவாரம் முன்னதாக முகிலன் கடலுக்குப் போனான். அன்று கடும்புயல் அடித்தது. படகு திசைமாறி எங்கோ போனது. ஓரிடத்தில் அது கவிழ, முகிலன் நீச்சலடித்து ஏதோ ஒரு கரையை அடைந்தான். அங்கே வித்தியாசமான மனிதர்கள் தென்பட்டனர். முனிவர் வடிவில் ஒருவர் இருந்தார். அந்த மனிதர்கள் புரியாத மொழியில் இவனிடம் ஏதோ பேசினர். இவன் விழித்தான். தன்னைக் கொல்லப்போகிறார்களோ என பயந்தான். அந்த முனிவர் வடிவ மனிதர் முன்னால் வந்தார். தம்பி! இவர்களைப் பற்றி கவலைப்படாதே. பயப்படவும் செய்யாதே இவர்கள் உன்னை தங்கள் தீவின் தலைவனாக ஓராண்டு காலத்துக்கு நியமிக்க இருக்கிறார்கள். அதைத்தான் இப்படி சொல்கிறார்கள், என மொழி பெயர்த்தார். ஓராண்டு கழித்து தான் நான் ஊருக்கு போக முடியுமா? என் மனைவி தேடுவாளே, என அழுது புலம்பினான். தம்பி! நீ அழுவதில் பயனில்லை. அழுகை ஒரு பிரச்னைக்கு முடிவைத் தராது. மேலும், ஓராண்டு கழிந்ததும் இந்த மனிதர்கள் பக்கத்து தீவுக்கு உன்னை அனுப்புவார்கள். அங்குள்ள மிருகங்கள் உன்னைக் கொன்று விடும். இதுதான் உன் விதி, என்றார்.

ஐயோ, என கதறிய முகிலனிடம் முனிவர், தம்பி! மீண்டும் அழுகிறாய் பார்த்தாயா? நீ நான் சொல்வதைக் கேட்டால் தப்பிக்கலாம். இதற்கு முன் இங்கு தலைவர்களாக இருந்தவர்கள் நான் சொன்னதைக் கேட்காததால் இறந்து போனார்கள். நீயாவது கேள், என்றார். முகிலன் என்னவென்று கேட்க, நீ இந்த ஓராண்டுக்குள் இங்குள்ள பலசாலிகளை பக்கத்து தீவுக்கு அனுப்பு. விலங்குகளை வேட்டையாடி விட்டு, அங்கு வீடுகள் கட்டச் செய்து, இங்குள்ள பாதிபேரை அங்கே குடியமர்த்து. அடுத்த ஆண்டு அந்த தீவுக்கு தலைவனாகி விடு. பின் உன் ஊர் சென்று மனைவியை அழைத்து வந்து தீவின் தலைவியாக்கி, காலமெல்லாம் மகிழ்ந்திரு, என்றார். அவன் அப்படியே செய்தான். ஆட்சிக்காலத்தில் ஒரு நிமிடம் கட பதவி சுகத்தை  அனுபவிக்க வில்லை.அம்மு கணவனைக் காணாமல் தவித்தாள். அம்பாளிடம் முறையிட்டாள். திருவிழாவன்று அவன் இல்லாமல் மனம் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல. அடுத்த திருவிழா நாளும் நெருங்கி விட்டது. தன் கணவன் எங்கோ உயிருடன் இருக்கிறான் என உள்மனது சொல்லியது. அவள் நினைத்தது போலவே ஒருநாள் படை பட்டாளத்துடன் முகிலன் ஊருக்கு வந்தான். மனைவியுடன் புதிய தீவுக்குச் சென்றான். சுகபோகமாக இருந்தான். முனிவர் அங்கும் வந்தார். தம்பி! நீ பழைய தீவிலிருந்து ஆட்களை அனுப்பி எப்படி சுகமான புதிய தீவை உருவாக்கினாயோ, அதே போல இவ்வுலகில் புண்ணியங்களைச் செய்து, அதன் பயனை விண்ணுலகுக்கு அனுப்பு. அதன் பயனை அங்கும் அனுபவிக்கலாம், என்றார். முகிலனும் அவர் சொன்ன பொருள் பொதிந்த வார்த்தைகளைக் கேட்டு மனமகிழ்வுடன் தன் தீவு மக்களுக்கு நன்மையே செய்தான். தலைவி அம்மு தான தர்மம் செய்தாள். அத்தீவிலேயே அம்பாளை பிரதிஷ்டை செய்து, சிறு கோயில் கட்டி விழா எடுத்தாள். பிறகென்ன.. அவர்கள் வாழ்வில் தினமும் திருவிழாவாகவே அமைந்தது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar