|
கேரள மாநிலத்திலுள்ள செங்குன்றூர் என்னும் ஊரில் சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர் விறல்மிண்டர். சிவனடி யார்களைப் பற்றி யார் தவறாக பேசினாலும், நினைத்தாலும் அவர் களை கடுமை யாக தண்டிப்பார். விறல் என்றால் வீரம் என்று அர்த்தம். இவரது பெயரிலிருந்தே இவ ரின் வீரம் பற்றி அறிய லாம். இவர் தினமும் கோயிலுக்கு சென்றா லும், அங்குள்ள சிவ னடியார்களை வழி பட்டு அதன் பின் தான் சிவனையே வழிபடு வார். பல சிவாலயங் களுக்கு சென்ற இவர் ஒரு முறை திருவாரூர் சென்றார். அதே சம யம் அங்கு நால்வரில் ஒருவரான சுந்தரரும் வந்திருந்தார். ஆனால் சுந்தரரோ அங்குள்ள சிவனடியார்களை பார்த்து மனதால் மானசீகமாக வணக்கம் சொல்லியபடி சிவ வழிபாட்டிற்கு கோயிலுக்குள் சென்று விட்டார். இதைப்பார்த்த விறல்மீண்ட நாய னாருக்கு, சிவனடியார்களை சுந்தரர் மதிக்காமல் சென்று விட்டதாக கோபம் வந்து விட்டது. அத்துடன் இதையெல்லாம் அறிந்த திருவா ரூர் தியாகராஜ பெருமான் மீதும் கோபம் வந்து விட்டது. இறைவனை வழிபட்டு வந்த சுந் தரர் இந்த விஷயத்தை கேள் விப் பட்டார். விறல்மீண்ட நாய னாருக்கு சிவனடியார்கள் மீது உள்ள பக்தி யைப் போல தமக்கும் தந்தருள வேண்டும் என தியாகராஜ பெரு மானிடம் வேண்டினார். அப்பொழுது இறைவன் தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் என்று அடி எடுத்துக்கொடுக்க திருத்தொண்டத்தொகை என்னும் திருப்பதிக்கம் பாடினார்.
சுந்தரர் மீதும் இறைவன் மீதும் இருந்த கோபத்தால் சுந்தரரையும், திருவாரூரையும் வெறுத்த விறல் மீண்ட நாயனார் ஊரை விட்டு சென் றார். அத்துடன் தம் வீட்டு விருந்திற்கு வருபவர்களை எந்த ஊரிலிருந்து வருகிறீர்கள் என்று கேட்பார். திருவாரூரிலிருந்து வருகிறேன் என்றால் வந்தவரது காலை வெட்டிவிடுவார். இதனால் இவரது மனைவி விருந்திற்கு வருபவர்களை எக்காரணம் கொண்டும் திருவாரூரி லிருந்து வருவதாக கூறவேண்டாம் என்று கூறினார். இதனால் பலரது கால்கள் தப்பின. எல்லாம் அறிந்த தியாகராஜப் பெரு மான் விறல்மீண்ட நாயனாரை ஆட் கொள்ள திருவுள்ளம் கொண்டார். எனவே தானும் ஒரு சிவனடி யார் போல் வேடமணிந்து இவரது இல்லத்திற்கு வந்தார். நாயன்மாரின் மனைவி யும் வழக்கம் போல், வந்த சிவனடியாரிடம் தன் கணவனின் செயல் பற்றி கூறி தயவு செய்து திருவாரூரில் இருந்து வரு வதாக கூறவேண் டாம் என்று கூறினாள். ஆனால் வந்திருந்த இறைவனோ, தாயே எனக்கு பொய் சொல்ல தெரியாது. எனவே நாங்கள் இருவ ரும் உணவருந்தும் போது நாயனா ரின் வலது பக்கம் வைத்திருக்கும் வாளை எனக்காக மாற்றி இடது பக்கம் வைத்து விடு, மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். நாயன்மாரும் வந்தார். சிவனடியாரு டன் உணவருந்தும் வேளையில் எந்த ஊரிலிருந்து வருகிறீர் கள் என்று கேட்க, சிவனடியாரும் நான் திருவாரூரிலிருந்து வருகி றேன் என்றார். இத னால் கோபமடைந்த நாயன்மார் அவரை வெட்ட வாளை தேடினார். வாள் இடப்பக்கம் இருந்ததால் அதை எடுக்கும் நேரத்தில் சிவனடியார் வெளியே ஓடி விட்டார். நாயன்மா ரும் விடவில்லை. சிவனடியாரை ஓட ஓட விரட்டி கொண்டே வந்தார். கடைசியில் களைப்படைந்து பூமியில் விழுந்து விட்டார். அப்போது அடியார் சிரித்துக் கொண்டே விறல் மீண்ட நாயனாரிடம், நீ இப்போது விழுந்து கிடப்பது திருவாரூர் எல்லையில் தான் என்றார். பதறிப்போன நாயனார் தன் வாளை எடுத்து தன் காலையே வெட்டிக் கொண்டார். இதற்கு மேலும் தன் பக்தனை சோதிக்க விரும்பாத தியாகராஜ பெருமான், கமலாம்பாள் சமேதராக நாயனாருக்கு காட்சி கொண்டு தன்னிடத்தில் சேர்த்துக் கொண்டார்.
|
|
|
|