Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » கடவுளின் கலக்கம்!
 
பக்தி கதைகள்
கடவுளின் கலக்கம்!

உலகத்தையே கலங்கடித்த கிருஷ்ண பரமாத்மாவை கலங்க வைத்தான் அந்த பக்தன். அவனது நியாயமான வேண்டுகோளை ஏற்காவிட்டால், தன்னை இனி யாரும் வணங்க மாட்டார்கள் என்ற நிலைமையில் பெருமாள் தத்தளித்தார். வேறு வழியின்றி பெருமாள் அவன் பின்னால் ஏவலன் போல கையில் பாம்பு படுக்கையை சுருட்டிக் கொண்டு சென்றார்.
பெருமாளின் முன்னால் சென்ற அந்த பக்தர் திருமழிசை ஆழ்வார். அவருக்கு முன்னால் நடந்து கொண்டிருந்தவர் பெருமாளை இந்தக் கதிக்கு ஆளாக்கிய கணிகண்ணன். இவர் திருமழிசை ஆழ்வாரின் சீடர். கணிகண்ணன் காஞ்சிபுரத்தில் அருள்பாலிக்கும் வரதராஜ பெருமாளின் மீது பாசம் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர். இளைஞராயினும் வேறு எந்த நோக்கமும் இன்றி, பெருமாளின் கைங்கர்யத்துக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். திருமழிசை ஆழ்வாருக்கு தொண்டு செய்பவர். வரதராஜப் பெருமாளே கதியென அங்கேயே கிடந்து சேவை செய்து வந்தார். பெருமாளை வணங்க வருவோருக்கு தேவையான உதவிகள் செய்வார். ஒரு ஊரில் கோயில் இருப்பது பெரிய விஷயமல்ல. அந்தக் கோயிலை எந்த அளவு பராமரிக்கிறோம்...சுத்தமாக வைத்திருக்கிறோம் என்பது தான் முக்கியம். கணிகண்ணன் கோயில் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும் என விரும்புவார். கோயிலில் ஒரு வயதான அம்மையார் தினமும் கூட்டி, கோலமிட்டு வரும் பணியைச் செய்து வந்தார். இவ்வளவு பெரிய கோயிலை இந்த முதுமைப் பருவத்திலும் அழகாக கூட்டி சுத்தமாக வைத்துக் கொள்கிறார் என்றால், இவர் இளமையாக இருந்தால் இன்னும் சுறுசுறுப்பாக வேலை செய்து, பெருமாளின் இருப்பிடத்தை இன்னும் எவ்வளவு சுத்தமாக வைத்துக் கொள்வார், என்று கருதினார் கணிகண்ணன். அந்த மூதாட்டியை தன் அருகில் அழைத்தார். அம்மா! தாங்கள் தினமும் இங்கு வந்து கோயிலை சுத்தம் செய்து பெருமாளை மகிழ்விக்கிறீர்கள். இந்த முதுமை பருவத்தில் உங்கள் உடல் வலிக்காதா? என்னிடமும் சிறிது நேரம் துடைப்பத்தைக் கொடுங்கள். நான் உங்களுக்கு உதவுகிறேன் என்றார். மூதாட்டி கணிகண்ணனை தன் மகன் போல் நினைத்து ஆனந்தத்துடன் பார்த்தார். அவரை அப்படியே அள்ளி அணைத்துக் கொண்டார். அந்த பாசப்பிணைப்பில் மூழ்கி, மூதாட்டியின் முதுகை தடவிக் கொடுத்தார் கணிகண்ணன்.

என்ன ஆச்சரியம்! மூதாட்டி இளமையே வடிவாக உருமாறினார். கணிகண்ணன் ஆச்சரியப்பட்டார். தான் மனதில் நினைத்ததை பெருமாள் செய்து காட்டி விட்டாரே என ஆனந்தம் கொண்டார். கோயிலுக்கு வந்தவர்களெல்லாம் அந்த இளம்பெண்ணைக் கண்டு அதிசயித்தனர். பெருமாளின் கருணையால் பூமிக்கு வந்த தெய்வமகள் என்றே கருதி மரியாதையுடன் அவளிடம் நடந்து கொண்டனர். அந்த பெண்ணை உருமாற்றிய கணிகண்ணனை போற்றி மகிழ்ந்தனர். இவ்வளவு பெரிய அதிசயம் அரண்மனையை எட்டாமல் இருக்குமா? அரசருக்கு இந்தத் தகவல் போனது. மாமன்னன் பல்லவராயன் கணிகண்ணனையும், அந்தப்பெண்ணையும் அவைக்கு அழைத்து வரச் செய்தான். பெருமாளின் பூரண அருள்பெற்ற இருவருக்கும் தக்க மரியாதை செய்தான். அத்துடன் தன் உள்ளத்தில் இருந்த ஆசையையும் சொன்னான். கணிகண்ணரே! உலகில் வயதாகி விட்டால் பல சிரமங்களை அனுபவிக்க வேண்டி இருக்கிறது. கைகால்கள் நடுங்குகிறது. சாப்பிட முடிவதில்லை. தூக்கம் வருவதில்லை. எனவே வயதாகி விட்ட எனக்கும் நீங்கள் இளமைப் பருவத்தை தர வேண்டும். உங்கள் கை யாருடைய முதுகில்பட்டாலும் அவர்கள் இளமை பருவம் எய்தி விடுவார்களாமே! என்னையும் அவ்வாறு முதுகில் தடவி இளைஞன் ஆக்குங்கள், என்றான். கணிகண்ணன் சிரித்தார். மன்னர் பெருமானே! நீங்கள் சொல்வது போல எந்த வித்தையும் எனக்கு தெரியாது. இந்தப் பெண் அப்படி மாறினால், கோயில் கைங்கர்யத்துக்கு உதவிகரமாக இருப்பாளே என நினைத்தேன். அது நடந்து விட்டது. அதைக் கொண்டு எல்லாரையும் இளைஞர்கள் ஆக்கும் சக்தி என்னிடம் இருப்பதாக கருதாதீர்கள், எனக் கூறினான். அரசன் கெஞ்சாக்குறையாக இதை திரும்பத் திரும்ப சொன்னான். கணிகண்ணனோ தன்னால் அப்படி செய்ய இயலாது என பலமுறை பணிவுடன் சொன்னார். அரசனுக்கு கோபம் வந்து விட்டது.

கணிகண்ணா! உன் நோக்கம் எனக்கு தெரிந்து விட்டது. நீ பெண்களை மட்டுமே இளமையாக்கி தவறு செய்யத் துடிக்கிறாய். அதற்காக சித்து வேலைகளைச் செய்கிறாய். அதனால் தான் ஆண்களை இளைஞர்களாக்க மறுக்கிறாய். கடைசியாக சொல்கிறேன். என்னை நீ இளைஞன் ஆக்காவிட்டால், உன்னை. சிறையில் அடைத்து விடுவேன், என்று கர்ஜித்தான். கணிகண்ணன் இதற்கெல்லாம் கலங்கவில்லை. என் அப்பன் நாராயணன் பிறந்ததே சிறைச்சாலையில் தான். அதன் அருமை பெருமையை நானும் அறியவே என்னையும் சிறைக்கு அனுப்புகிறான் போலும்! சிறைக்கு செல்வதில் எனக்கு மகிழ்ச்சி. அதை தெய்வத்தின் இருப்பிடமாகவே கருதுகிறேன், என்று கூறிவிட்டு, காவலர்களிடம் தன்னை சிறைக்கு அழைத்துச் செல்லும்படி கேட்டார். காவலர்கள் அவரை சிறைச்சாலையில் அடைத்தனர். இந்தத் தகவல் கணிகண்ணனின் குருநாதரான திருமழிசை ஆழ்வாரை எட்டியது. அந்த அடியவர் பெரும் சினம் கொண்டார். நேரில் சென்று மன்னனைக் கண்டித்தார். மன்னன் ஆழ்வாரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு, கணிகண்ணனை விடுவித்தான். ஆனால், தன்னை இளமையாக்க மறுத்த கணிகண்ணன் காஞ்சியை விட்டு சென்று விட வேண்டும் என ஆணையிட்டான். திருமழிசை ஆழ்வாருக்கு கோபம் இன்னும் அதிகமானது. என் சீடன் இல்லாத ஊரில் நானும் தங்க மாட்டேன், எனச் சொல்லி விட்டு அவரும் வெளியேறி விட்டார். இதனால் என்ன கேடு நேரப்போகிறதோ என அமைச்சர்களும், அவையோரும் கலங்கினர். அவர்கள் நினைத்ததை விட கொடுமையான சோதனைக் காலம் காஞ்சியை நெருங்கியது. கோபத்துடன் சென்ற ஆழ்வார், வரதராஜப் பெருமாள் கோயிலுக்குள் சென்றார். பெருமாளே! இங்கே உன் பக்தர்கள் படும் அவஸ்தை உன் கண்ணில் படவில்லையா? நீ சயனத்தில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறாயே! நீ பக்தர்களைக் காக்கும் உண்மையான தெய்வம் என்றால் உடனே உன் பாம்பு பாயை சுருட்டிக் கொண்டு எங்களுடன் புறப்படு. நாம் வேறு இடத்தில் போய் தங்குவோம், என்றார்  கடுமையாக. பெருமாள் கருவறையிலிருந்து எழுந்தார். எதுவுமே பேசவில்லை. பாம்புப்பாயை சுருட்டினார். கணவனின் பின்னால் லட்சுமியும் புறப்பட்டாள். கணிகண்ணன் முன் செல்ல, ஆழ்வார் பின்தொடர, பெருமாள் பாம்புப்பாயை கையிடுக்கில் இடுக்கிக் கொண்டு அவர்கள் பின் பவ்வியமாய் செல்ல, லட்சமிதேவி தலைகுனிந்து நடந்து கொண்டிருந்தாள். அவர்கள் வெளியேறியதும் ஜேஷ்டாதேவி எனப்படும் மூதேவி காஞ்சியில் குடி கொண்டாள். மக்கள் அந்தக்கணமே பெரும் துன்பங்களை அனுபவிக்கத் தொடங்கினர். அரண்மனையில் பிரச்னைகள் உருவாயின. நடந்ததை அறிந்து மன்னன் அவர்கள் பின்னால் ஓடினான். ஆழ்வாரிடமும், கணிகண்ணனிடமும் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டான். பெருமாளின் பாதத்தை விடாமல் பற்றிக் கொண்டான். அனைவரும் மனமிரங்கினர். மீண்டும் காஞ்சி வந்தனர். வாழ்வில் கிடைத்தற்கரிய பருவம் இளமைப் பருவம். இந்தப் பருவத்தை இன்பமாய் கழித்தாலும், இறைப்பணிக்கும் சிறிதளவு நேரமாவது ஒதுக்க வேண்டும். அப்படி செய்தால், இறைவன் உங்கள் பின்னால் கைகட்டி வருவான்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar