Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » கடவுள் ஒருவரே!
 
பக்தி கதைகள்
கடவுள் ஒருவரே!

ஒரு ராஜா அமைச்சரை அழைத்தார். மந்திரியாரே! என் மனைவி முருகனை வணங்குபவள். நீரோ சிவனை வணங்குவதாகச் சொல்கிறீர். இந்த பணியாளன் திருமண் அணிந்து பெருமாளை வணங்குகிறேன் என்கிறான். ஏன் உங்களுக்குள் இவ்வளவு குழப்பம்? ஒரே தெய்வத்தை வணங்கக்கூடாதா! இறைவனுக்கு உருவமில்லை என்றும் சொல்கிறார்களே! பின் ஏன் இவ்வளவு உருவத்தைப் படைத்திருக்கிறார்கள்? என்றார். மந்திரி சிரித்தார். ராஜா! இப்படித் தான் பலரும் குழம்பிக் கொள்கிறார்கள். கடவுளின் பெயரில் தான் வித்தியாசம் இருக்கிறதே தவிர அவர் யாராலும் அறியப்பட முடியாதவர் என்ற கருத்தில் மாற்றமில்லை, என்றவர் ஒரு துணியை எடுத்தார்.இது என்னவென்று தெரியுமா? என்றார்.இதென்ன பிரமாதம், துணி... என்றார் ராஜா. அதை இடுப்பில் கட்டிய மந்திரி ஒரு வேலைக்காரனை அழைத்து, இது என்னபப்பா? என்றார். துண்டு என்றான் அவன்.அந்தத் துணியை தன் மேல் போட்டுக் கொண்டு, இப்போது இது என்ன? என்று கேட்டார். அங்கவஸ்திரம் என்று பதிலளித்தான் அவன். அதையே தரையில் விரித்து, இப்போது இதற்கு என்ன பெயர்? என்றார். படுக்கை விரிப்பு என்று  பதிலளித்தான் அவன். இப்போது ராஜாவை நோக்கிய மந்திரி, அரசே! துணி என்பது ஒன்று தான். ஆனால், இதுவே அது இருக்கும் இடத்தைப் பொறுத்து பெயர் மாறுபடுகிறதல்லவா! அதைப்போல,  கடவுளுக்கு, அவரவருக்கு விருப்பமான வடிவம் தந்து, அதைப்பற்றிய உயர்வான கதைகள், பாடல் களைச்சொல்லி வழிபடுகிறார்கள். பொருள் ஒன்று தான். வடிவம் தான் வேறு. ஒருவரான கடவுளே எல்லா வடிவங்களிலும் உள்ளிருந்து அருள்புரிகிறார் என்றார். புரிந்து கொண்ட ராஜா, அமைச்சரைப் பாராட்டினார்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar