|
காஞ்சிபுரத்தில் அருள்பாலிக்கும் தேவாதிராஜ பெருமாளுக்கு நடாத்தூர் ஆச்சாரியார் என்ற பக்தர் தினமும் பசும்பால் நிவேதனம் செய்வார். பாலை நன்றாகக் காய்ச்சி, ஆறவைத்து, இளஞ்சூடாக இருக்கும்போது, பரிமள திரவியங்களான குங்குமப்பூ, கற்கண்டு சேர்த்து பூஜிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். குழந்தைக்கு என்ன தான் கடும்பசி என்றாலும், அம்மா பால் புகட்டும் போது, சூடு தணிந்த பிறகே கொடுப்பாள். அதுபோல, இந்த அடியவர் நிவேதனம் செய்ததால், அன்பின் மிகுதி காரணமாக, பெருமாளே அவரைப் பார்த்து அம்மா! என்று அழைத்தார். அதனால் நடாத்தூர் ஆச்சாரியாருக்கு நடாத்தூர் அம்மாள் என்ற பெயர் நிலைத்து விட்டது. இறைவனே என்றாலும் கூட, அவருக்கும் இளஞ்சூடாக பதார்த்தங்களைப் படைப்பதே முறையாகும். இப்படி செய்வதன் மூலம், அவரே நம்மை ஆராதிக்கும் நிலை ஏற்படும்.
|
|
|
|