Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » ஒன்பதா? பத்தா?
 
பக்தி கதைகள்
ஒன்பதா? பத்தா?

பத்து நண்பர்கள் ஒரு காட்டின் வழியே வந்து கொண்டிருந்தனர். இடையில் ஒரு ஆறு குறுக்கிட்டது. மழைக்காலம் என்பதால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அனைவரும் ஆற்றில் நீந்தி அக்கரைக்குச் சென்றனர். ஆற்றில் யாராவது அடித்துச் செல்லப்பட்டு விட்டார்களா என்பதை ஊர்ஜிதம் பண்ண அந்த பத்து பேரும் ஒன்று, இரண்டு, மூன்று என்று ஒவ்வொருவராக எண்ணிப் பார்த்துக் கொண்டார்கள். முதலாமவன் எண்ணும்போது ஒன்பது பேர்கள் மட்டும் கணக்கில் வந்தது. ஒருவரைக் காணவில்லை. நாம் பத்து பேர் அல்லவா வந்தோம். ஒன்பது பேர்கள்தானே இருக்கிறோம் என்று திடுக்கிட்டு கூவினான். மற்றொருவன், இரு. நான் எண்ணுகிறேன் என்று அவன் எண்ணும் போதும் ஒன்பது பேர் மட்டும் தான் வந்தது. இப்படி எல்லோரும் ஒவ்வொருவராக எண்ணிப் பார்த்த பிறகு நாம் ஒன்பது பேர்தான் இருக்கிறோம். அய்யய்யோ! நமது நண்பனை ஆற்றுவெள்ளம் அடித்துப் போய் விட்டதே என்று கூப்பாடு போட்டார்கள். ஓ வென்று அழுது புரண்டார்கள். ஒவ்வொருவரும் எண்ணும்போதும் தன்னை விட்டுவிட்டே எண்ணினார்கள். அப்பொழுது கணக்கு ஒன்பதுதானே வரும்?

அந்த வழியாக சாது ஒருவர் வந்தார். ஏன் எல்லோரும் அழுது கொண்டிருக்கிறீர்கள்? என்று அவர்களைப் பார்த்துக் கேட்டார். அவரிடம் எல்லோரும் முறையிட்டார்கள். சுவாமி! நாங்கள் அக்கரையிலிருந்து பத்து பேராக ஆற்றில் நீந்திக் கொண்டு வந்தோம். இங்கு வந்து எண்ணும்போது நாங்கள் ஒன்பது பேர்தான் இருக்கிறோம். எங்களில் ஒருவனை ஆற்றுவெள்ளம் அடித்துச் சென்றுவிட்டது. அவனை இழுந்துவிட்டதினால் நாங்கள் அழுகிறோம். என்று கூப்பாடு போட்டார்கள். சாது தன் கண்ணாலேயே அவர்களை எண்ணியவாறு பத்து பேரும் இருப்பதை ஊர்ஜிதம் செய்து கொண்டார். சம்சாரத்தில் உழலும் மனிதனின் புத்தியை நன்கு அறிந்த சாது, நல்லது, இப்போது நான் எண்ணுகிறேன். ஒவ்வொருவர் முதுகிலும் நான் ஓங்கித்தட்டும் போது ஒன்று, இரண்டு, மூன்று என்று ஒவ்வொருவராக சொல்ல வேண்டும். ஏனெனில் நீங்கள் காணாமல் தொலைந்துப் போகவில்லை என்று உறுதி செய்து கொள்வதற்காகத்தான் என்றார்.

எல்லோரும் சரி என்று கூற, சாது ஒவ்வொருவர் முதுகிலும் ஓங்கி தட்டும் போது ஒன்று, இரண்டு என்று அவரவர் சொல்லிக் கொண்டேவர கடைசியாக இருப்பவன் பத்து என்று சொன்னான். இப்போது பத்து பேரும் இருக்கிறீர்களா? என்ற சாதுவிடம், சாமி! என்ன மாயம் செய்தீர்கள்? நாங்கள் எண்ணிப் பார்த்து கொண்டபோது ஒன்பது பேர்தானே இருந்தோம். இப்போது பத்து பேரும் இருக்கிறோமே! என்று ஆச்சர்யமடைந்தார்கள். இது மிகவும் பழமையான கதைத்தான். ஆனால் இதில் மனிதனைப் பற்றிய ஆழ்ந்த செய்தி உள்ளது. எண்ணுபவன் ஒவ்வொருவனும் அவனை விட்டுவிடுகிறான். மற்றவர்களைப் பார்த்தே எண்ணுகிறான். தன்னைத்தானே எண்ணி, சிந்தித்து அறிந்து கொள்ளாதவன் சரியான இலக்கை அடைவதில்லை. எப்பொழுதும் பிறரைக் குறை சொல்பவன் தன்னுடைய குறையை எண்ணிப் பார்ப்பதில்லை.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar