|
மிதிலை மன்னர் ஜனகர், தன் மகளான சீதைக்கு சுயம்வரம் நடத்தினார். அதன்படி, சிவதனுசு என்னும் வில்லை ஒடிப்பவருக்கே தனது பெண்ணைத் திருமணம் செய்து கொடுக்க முடிவெடுத்தார். ராமன் அந்த வில்லை ஒடித்தார். இருவருக்கும் திருமண ஏற்பாடு நடந்தது. ராமனின் கைகளில் சீதையின் கைகளைச் சேர்த்து வைத்த ஜனகர், ஒரு மந்திரம் சொல்லி தாரை வார்த்துக் கொடுத்தார். அந்த மந்திரத்தின் பொருள் இதுதான். இல்லற வாழ்வில் நிழல் போல் என்றும் பிரியாமல் உன்னுடன் இவள் இருப்பாள். இவளது கையை நீ பிடிப்பதால், உனக்கு பெருமையும், நன்மையும் உண்டாகட்டும். தூய்மையானவளும், பதிவிரதையுமான சீதையால் உன் வாழ்வில் பெருமை சேரட்டும்,கணவனும், மனைவியும் மனமொத்த தம்பதிகளாக வாழ்வதற்காகவே, இந்தச் சடங்கு நடத்தப்படுகிறது.
|
|
|
|