|
நமக்கு தேவைப்படாத பொருட்கள், புத்தகங்கள் இடத்தை அடைத்துக்கொண்டு ஷெல்பில் குவிந்து கிடக்கும். அவற்றில் சில, மற்றவர்களுக்கு தேவைப்படலாம். நாம் அவற்றை வீணாக்காமல், அவர்களுக்கு கொடுத்து உதவலாம். ஒரு கதையைக் கேளுங்க! மாட்டுத்தொழுவத்திற்கு வந்த ஒரு நாய், அங்கே குவிந்திருந்த வைக்கோல் போர் மீது படுத்து தூங்கி விட்டது. வெளியே சென்றிருந்த மாடு திரும்பி வந்து, வைக்கோலை சாப்பிட ஆரம்பித்தது. வைக்கோலின் அசைவில் நாய் விழித்துக் கொண்டது. மட மாடே! என் தூக்கத்தை ஏன் கெடுத்தாய்? என்றது. இது என் இடம். என் முதலாளி எனக்களித்த உணவு இது. இதன் மேல் படுத்து இதை அசுத்தப்படுத்தியதும் இல்லாமல், கேள்வி வேறா கேட்கிறாய். போ...போ.. நீ வழக்கமாய் படுக்கும் குப்பை மேட்டில் போய் படு, என்று கடிந்து கொண்டது. கோபமடைந்த நாய், மாட்டின் மீது பாய்ந்து கடிக்க ஆரம்பித்தது. கடி தாங்காத மாடு ஒதுங்கிப் போய் விட்டது. நாயால் வைக்கோலை சாப்பிட முடியாது. இருந்தாலும், அதை விட மறுத்தது. இதுபோல் தான், சிலர் தாங்களும் வாழ மாட்டார்கள், மற்றவர்களையும் வாழ விட மாட்டார்கள். இந்தக் கதையில் வரும் நிகழ்வைப் போல் இல்லாமல், உங்களுக்கு பயன்பட்ட பொருட்களை மற்றவர்களுக்கு கொடுத்து புண்ணியத்தை சேருங்களேன்!
|
|
|
|