|
உயர்நிலைப்பள்ளி, கல்லூரி இறுதி தேர்வுகள் துவங்கியும் நெருங்கியும் விட்டன. இந்தசமயத்தில், மாணவர்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும். இதோ! இந்தக் கதையைப் படித்து விட்டு படிப்பைத் தொடருங்கள். அதிக மதிப்பெண்ணுடன் வெற்றிக்கனியைப் பறிப்பீர்கள்.பக்தியில் மிகுந்த ஈடுபாடுள்ள இளைஞனுக்கு, பிறப்பற்ற நிலையை அடைய வேண்டும் என்றஎண்ணம் எழுந்தது. அதுபற்றிய நூல் ஒன்றைஎழுதினான். அந்த ஏட்டுடன் ஒரு முனிவரைச் சந்தித்தான்.முனிவரே பிறப்பற்ற நிலையடைய, இதில் நான் எழுதியிருப்பதெல்லாம் சரிதானா! பாருங்கள், என்று வேண்டினான். அதைப்படித்த முனிவர், அவனைப்பாராட்டி விட்டு, நான் உனக்கு ஒரு மந்திரம்சொல்லித் தருகிறேன். நீ அமைதியாகத் தனிமையில் அமர்ந்து அதை தியானம் செய்து வா, என்றார். அந்த மந்திரத்தை உபதேசித்தார். அவன் வீடுதிரும்பினான்.வீட்டில் எல்லோரும் அவரவர் வேலையில்ஈடுபட்டிருந்தனர். குழந்தைகள்விளையாடிக் கொண்டிருந்தனர்.
அக்கம் பக்கத்துவீடுகளில் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டிருந்தனர்.எங்கும் இரைச்சலாக இருந்ததால், அவனால் வீட்டில் தியானம் செய்ய முடியவில்லை. ஊருக்கு வெளியேயுள்ள அரசமரத்தடியில் போய் உட்கார்ந்தான். அங்கே, இலைச்சருகுகள் காற்றில்அசைவதும், பறவைகள் கூச்சலிடுவதும் அவனுக்கு எரிச்சலை உண்டாக்கின.உலகில் எங்குமே அமைதி இல்லை என்ற முடிவுக்கு வந்த அவன், தனக்கு உபதேசித்தமுனிவரை நாடிச் சென்றான். சுவாமி! உலகில் எங்குமே நிம்மதியாகஅமர முடியவில்லை. வீட்டிலும் தனிமை இல்லை. காட்டிலும் தனிமை இல்லை. நான் எப்படி மந்திரம் சொல்வேன்? என்று வருத்தமாகக் கேட்டான். முனிவர் இளைஞனிடம், எந்த இடைஞ்சல்வந்தாலும், அதையெல்லாம் கடந்து ஒரு செயலில் ஆழ்கிறவனே இறைவனின் அருளைப் பெறமுடியும். உன்னைச் சுற்றி என்ன நடந்தால்உனக்கென்ன! நீ உன் பணியில் கவனமாகஇருந்தால் சுற்றுச்சூழல் உன்னைப் பாதிக்காது. முயற்சி செய்,என்றார்.அவரது புத்திமதியை ஏற்ற இளைஞனும், அதன்படியே நடந்து வெற்றி பெற்றான். இந்த இளைஞனைப் போல, மாணவர்கள் தங்கள் சுற்றுப்புற சூழலைப் பற்றி கவலைப்படக்கூடாது. அம்மா டிவி பார்க்கிறாளே, தம்பி, தங்கைகள் விளையாடுகிறார்களே! தெருவில் கூச்சலாகஇருக்கிறதே! புது சினிமா வந்திருக்கிறதே! என்ற புறச்சூழ்நிலைகளையெல்லாம் மறந்து, படிப்பில் ஆழ்ந்து விட்டால் உங்களை யாராலும் அசைக்க முடியாது.
|
|
|
|