Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » எங்குமிருக்கும் அருட்பெருஞ்ஜோதி!
 
பக்தி கதைகள்
எங்குமிருக்கும் அருட்பெருஞ்ஜோதி!

மகனின் நிலை கண்டு வருந்தினார் கூடலூர் வேதநாயகம் பிள்ளை. வள்ளலாரின் பக்தரான அவரது மகனுக்கு உடல் நலமில்லை. வள்ளலாருக்கு மருத்துவ ஞானம் உண்டு என்பதும், அவர் அதிசயம் புரிந்தே நோய்களைக் குணமாக்குபவர் என்ற விபரமும் கூடலூராருக்கு தெரியாது. அவர் கவலையில் ஆழ்ந்திருந்த நேரத்தில், வள்ளலாரே அங்கு வந்து விட்டார். ஆ...வள்ளலார் என் வீட்டிற்கு வந்திருக்கிறாரா? கூடலூராரால் பேசக்கூட முடியவில்லை. அவரை அன்புடன் வரவேற்றார். உன் மகன் எங்கே! என்று கேட்டபடியே, அவன் படுத்திருந்த அறைக்கு வந்தார் வள்ளலார். அவனது நிலையைச் சொல்லி கதறி அழுதார் வேதநாயகம் பிள்ளை. கவலைப்படாதே! என்ற வள்ளலார், திருநீறை எடுத்து அவன் உடலில் பூசினார். படுத்த படுக்கையாக கிடந்தவன் எழுந்து அமர்ந்தான். நோய் வந்த தடமே தெரியவில்லை. வேதநாயகம் பிள்ளை அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவரிடம் விடை பெற்றார் வள்ளலார். மறுநாள், வள்ளலார் தங்கியிருந்த வடலூருக்கு இருவரும் கிளம்பினர். அங்கிருந்தோரிடம் வள்ளலார் தங்கள் இல்லத்துக்கே வந்து, அதிசயம் நிகழ்த்தியதைக் கூறினர். அவர்கள் அதிர்ந்தார்கள். என்ன சொல்கிறீர்கள்! நேற்று வள்ளலார் வடலூரில் தான் தங்கியிருந்தார். உங்கள் இல்லத்துக்கு வரவில்லையே! என்றதும், பிள்ளை வள்ளலாரிடம் ஓடினார். அது இறையருளால் நிகழ்ந்த விஷயம். அதை மற்றவர்களிடம் சொல்லி பெரிதுபடுத்தாதே என்று தன்னடக்கத்துடன் சொல்லி, அவரை ஆசிர்வதித்தார் வள்ளலார். எங்குமிருக்கும் அருட்பெருஞ்ஜோதியாக அவர் விளங்கினார்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar