Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » பஞ்சு மெத்தை!
 
பக்தி கதைகள்
பஞ்சு மெத்தை!

கனகராஜ் தன் வயதான தாய், தந்தையுடன் ஒரு வீட்டில் வசித்து வந்தான். அவன் பக்கத்து ஊரில் இருந்த ஒரு இரும்பு ஆலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தான். அவன் வீட்டில் சகல வசதிகள் இருந்தும், அவன் படுக்கும் போது இரவில் அவனுக்கு தூக்கம் வருவ தில்லை. இதனால் அவன் கண்களெல்லாம் சிவந்து போயிருந்தன. இரும்பாலையில் வேலை பார்க்கும்போது அவனுக்கு தூக்கம் வரும். வேலை செய்யுமிடத்தில் தூங்கமுடியாதல்லவா? அதனால் தூக்கத்தைக் கட்டுப் படுத்திக் கொண்டு வேலை செய்தான். தூக்கம் இல்லாததால், அவன் சக தொழிலாளர்களிடம் எரிந்து விழுந் தான். அவனுடன் பேசுவதையும், பழகுவதையும் தொழிலாளர்கள் நிறுத்திக் கொண்டனர். இதனால் கனகராஜ் வீட்டிற்கு சோகத்துடன் வந்தான். அவனுடைய தந்தை அவனிடம் காரணம் கேட்டார். இரவில் தனக்குக் கட்டிலில் படுத்தும் தூக்கம் வரவில்லை என்றும், அதனால்தான் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்ப தையும், இதனால் தன்னுடன் பணிபுரியும் தொழிலாளர்களுடன் கூட மகிழ்ச்சியாகப் பழக முடிய வில்லை என்றும், வேலை நேரத்தில் தூக்கம் வருகிறது, என்றும் தந்தையிடம் கூறினான்.

உடனே அவனுடைய தந்தை அவனை வீட்டிலிருக்கும்படிச் சொல்லிவிட்டு, நேராக பஜாருக்குச் சென்று ஒரு கட்டில் மெத்தையை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தார். கனகராஜ் இன்று இரவு இதில் படு! என்று தன் மகனிடம் கூறினார். கனகராஜும் அன்று இரவு தன் தந்தை வாங்கி வந்த புதிய கட்டில் மெத்தையில் தூங்கினான். ஆனந்தமான தூக்கம் அவனுக்கு வந்தது. இப்படி தன்னை மெய்மறந்து அவன் ஒரு நாளும் தூங்கியதே இல்லை. அப்படி ஒரு தூக்கம் அன்று இரவு அவன் தூங்கினான். மறுநாள் காலையில் அவன் எழுந்த போது அவன் மிகுந்த மகிழ்ச்சியோடு இருந்தான். உடல் நல்ல வலிமையோடு இருப்பதை உணர்ந்தான். அந்த மகிழ்ச்சியில் அவன் தந்தையைப் பார்த்து, அப்பா நம் வீட்டில் ஏற்கெனவே ஒரு கட்டில் மெத்தை இருந்தது. அதில் நான் தூங்கியும் வராத தூக்கம், நீங்கள் புதிதாக வாங்கி வந்த கட்டில்மெத்தை யில் படுத்தபோது என்னை மறந்து தூங்கி விட்டேன். இதன் ரகசியம் என்ன? என்று கேட்டான்.

இந்த மெத்தையானது இலவு என்ற ஒரு மரத்தின் காய்களிலிருந்து கிடைத்த இலவம் பஞ்சு அடைத்த மெத்தையாகும். இந்த இலவம் பஞ்சு மிருதுவானது. உடலுக்கு இதமானது. இதில் தூங்கும்போது ஆழ்ந்த தூக்கம் வரும். நோயும் அணுகாது; நீ அவ்வையார் எழுதிய இலவம் பஞ்சில் துயில் என்னும் ஆத்திசூடிப் பாடலை இளமையில் படித்திருக்கிறாய் அல்லவா? இனிமேல் இந்த மெத்தையிலேயே நீ உறங்கு, என்றார். அன்று கனகராஜ் வழக்கம்போல வேலைக்குச் சென்றான். இரவில் நன்றாக தூங்கியதால் அன்று முழுவதும் அவன் உற்சாகமாக வேலை செய்தான். தன் சக தொழிலாளர்களுடன் இனிமையாகப் பேசினான். அனைவரையும் இலவம் பஞ்சு அடைக்கப்பட்ட கட்டில் மெத்தையில் தூங்குமாறு கூறினான். அவனுடைய பேச்சை அனைவரும் கேட்டனர்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar