|
பொதுவாக வேலை செய்பவர்கள், இந்த வேலை ரொம்ப கஷ்டமா இருக்கு! ஐயையோ! இது தெரிஞ்சிருந்தா, இந்த வேலைக்கே வந்திருக்க மாட்டேன். அவனை மாதிரிஅரசாங்க உத்தியோகத்துக்குப் போயிருப்பேன், என்பார்கள்.அரசாங்க வேலையில் இருப்பவரோ, அவருக்குரிய கஷ்டத்தைச் சொல்வார்.அதாவது, எல்லாருமே அவரவர் வேலையில் கஷ்டம் என புலம்புவார்கள்.ஜப்பான் நாட்டில் ஒரு தாயும் மகனும் மட்டும் வசித்த வீடு அது. ஏழைக்குடும்பம். வீட்டுத் தலைவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இப்போது, அந்தத் தாய்க்கும் உடல்நிலை சரியில்லை.மரணத்தருவாயில் இருந்த தாயிடம், அம்மா நீயும் என்னைவிட்டுப் போயிடாதே. நான் அனாதையாகிடுவேன், என அவளது கைகளைப் பிடித்து அழுதான். அவளது பதினாறு வயதுமகன்.தாய் சொன்னாள், மகனே! எந்தச் சூழ்நிலையிலும் கலக்கம் கூடாது. நம் நாட்டில் ஹிரோஷிமாவும், நாகசாகியும் எத்தனை அநாதைகளை உருவாக்கியது தெரியுமா? அவர்களெல்லாம் வாழாமலா போய்விட்டார்கள்? ஒன்றை மட்டும் புரிந்து கொள்.உன் தந்தை அடிக்கடிஎன்னிடம் ஒரு விஷயத்தைச் சொல்வார். அதையே உனக்கு நான் சொல்கிறேன், என்ற தாயிடம், அந்த துயரமானசூழ்நிலையையும் மறந்து, அவள் சொல்வதைக் கேட்க ஆர்வமானான் மகன்.மகனே! நீ ஒருகலைஞனாகி விடு. பிழைத்துக் கொள்வாய். அதற்காக, பெரிய கலைஞன் ஆக வேண்டும் என சொல்லவில்லை. உனக்கு கழிவறை சுத்தம் செய்யும் பணி கிடைத்தால் கூட அதையும் கூட கலை போலக் கருதி ரசித்து செய். நீ சுத்தம் செய்வது போல், வேறு யாரும் அதை சுத்தம் செய்ய முடியாதபடி இருக்க வேண்டும். உன் வேலையில் ஒரு தனித்துவம் வெளிப்பட வேண்டும், என்றாள்.ஆம்... வேலையை ரசித்து, இஷ்டத்துடன் செய்யுங்கள்... கஷ்டம் தெரியாது. |
|
|
|