Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » தியானம்!
 
பக்தி கதைகள்
தியானம்!

ஆற்றங்கரையில் கழுதையானது அமைதியுடன் தியானம் செய்து வந்தது. கழுதையின் இந்தச் செயலை குரங்கு ஒன்று கவனித்தது. அந்தக் குரங்கு ஆற்றங்கரையை ஒட்டிய ஆலமரத்தில் வசித்து வந்தது. கழுதை தினமும் ஆற்றங்கரையில் தியானம் செய்வதை கண்டு, அந்தக் குரங்கு பொறாமையடைந்தது. "நம்மால் செய்ய முடியாத ஒரு செயலை இந்தக் கழுதையானது செய்து கொண்டிருக்கிறது. எனவே, நாம் இச்செயலில் இந்தக் கழுதையை நீடிக்க விடக் கூடாது. எப்படியாவது நாம் இந்தக் கழுதையின் தவத்தினைக் கலைக்க வேண்டும் என்று முடிவு செய்தது குரங்கு. உடனே அந்தக் குரங்கு தக்க நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. ஒருநாள் கழுதையானது அமைதியுடன் ஆற்றங்கரையில் அமர்ந்தபடி தியானம் செய்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் குரங்கு ஒரே பாய்ச்சலாக கழுதையின் முன்னே வந்து நின்றது.

கழுதையின் முன்னே வந்த குரங்கு தரையே குலுங்கும்படியாக குட்டிக்கர்ணம் போட்டது. பின்னர் கீச்...கீச்...கீச்... என்று கத்தியபடி, கழுதையின் மிக அருகில் சென்றது. ""கழுதையே! என்னைப் பார்! நான் எப்படியெல்லாமோ துள்ளிக் குதித்தபடி விளையாடிக் கொண்டிருக்கிறேன். நீயும் என்னைப் போன்று துள்ளிக் குதித்தபடி விளையாடலாமே. அதனை விட்டுவிட்டு எதற்காக இப்படித் தியானம் என்ற பெயரில் உன்னை நீயே வருத்திக் கொண்டிருக்கிறாய்? என்று சப்தமாகக் கேட்டது குரங்கு. கழுதை மெல்ல தன் கண்களைத் திறந்தது. ""குரங்கே... நீ சொல்வதும் சரிதான். எனக்கும் உன்னைப் போன்று துள்ளிக் குதித்து விளையாட வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. நான் இப்போது துள்ளிக் குதித்தபடி உன்னோடு விளையாடுகிறேன். என் தியானத்தை விட்டு விடுகிறேன், என்றது.
கழுதை தன் பேச்சைக் கேட்ட மாத்திரத்தில் உடனே மனம் மாறும் என்று குரங்கு எதிர்பார்க்கவில்லை. அது மிகவும் மகிழ்ச்சியுடன் கழுதையை நோக்கியது. தான் எளிதாகக் கழுதையின் மனதை மாற்றியதாகத் தனக்குள் கர்வப்பட்டபடி நின்றது.

அதே நேரத்தில் கழுதையானது, ""குரங்கே, இதோ நான் துள்ளிக் குதித்த படி விளையாடுகிறேன். என்னுடைய விளையாட்டை நீ பார், என்று கூறிய படி தன் பின்னங்கால்களையும், முன்னங்கால்களையும் மேலே தூக்கிய படி துள்ளிக் குதித்தது. கழுதை துள்ளிய வேகத்தில் அதன் பின்னங்கால்கள் இரண்டும் குரங்கின் முகத்தில் பலமாக உதைத்தன. அந்த அதிரடி உதையை குரங்கு எதிர்பார்க்கவில்லை. அதன் வாயில் இருந்து ரத்தம் வடிய, பற்கள் ஆங்காங்கே தெறித்து விழுந்தன. வலி தாங்க முடியாமல் அதிர்ச்சியுடன் ஆய்...ஊய்... என்று ஓட்டமெடுத்தபடியே சென்றது குரங்கு. "இனிமேல் அந்தக் குரங்கானது இந்த இடத்திற்கு வராது. நாம் அமைதியுடன் தியானம் செய்யலாம் என்று மகிழ்ச்சியடைந்தது கழுதை.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar