Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » ராதையின் பாதமே கண்ணனுக்கு கீதமே!
 
பக்தி கதைகள்
ராதையின் பாதமே கண்ணனுக்கு கீதமே!

புண்ணியத்தலமான பூரி அருகிலுள்ள கிந்து பில்வம் கிராமத்தில் தேவசர்மா என்ற பக்தர் வாழ்ந்தார். நீண்டநாளாக குழந்தையில்லாமல் வருந்திய அவர், பூரி ஜெகந்நாதரிடம் ""பிரபோ! எனக்கு குழந்தை பிறந்தால் அக்குழந்தையை உமக்கே அர்ப்பணிக்கிறேன், என்று வேண்டிக்கொண்டார். சிலகாலம் சென்று அழகான பெண்குழந்தை பிறந்தது. "பத்மாவதி என்று பெயரிட்டார். அவள் திருமண வயதை அடைந்தாள். ஜெகந்நாதருக்கு கொடுத்த வாக்குப்படி உரிய இடத்தில் சேர்க்க முடிவெடுத்தார். அவளை அலங்கரித்து பூரி ஜெகந்நாதர் சந்நிதியில் விட்டு வீட்டுக்குத் திரும்பினார்.
அன்றிரவு கோயில் அர்ச்சகர் கனவில் தோன்றிய ஜெகந்நாதர், ""இந்த கிராமத்தில் ஜயதேவர் என்ற பக்தர் இருக்கிறார். கணப்பொழுதும் என்னை மறவாதவர். அவருக்கு பத்மாவதியை மணம் செய்து கொடுங்கள், என்று கட்டளையிட்டார். தான் கண்ட கனவை அர்ச்சகர் தேவசர்மாவிடம் எடுத்துக்கூற, ஜயதேவரிடம் பத்மாவதியை அழைத்துச் சென்றனர்.
""பத்மா! ஜயதேவரே உன் கணவர். இனிமேல் இந்த குடிசை தான் உனது இருப்பிடம். கணவருக்கு ஏற்ற மனைவியாக வாழவேண்டியது உன் பொறுப்பு, என்று சொல்லி ஒப்படைத்தார்.
ஜயதேவர் பத்மாவதியிடம், ""நான் பரமஏழை. கிருஷ்ணரிடம் பக்தி செய்வது மட்டுமே என் விருப்பம், என்றார். அவளும் திடமனதுடன், ""சுவாமி! உங்களுக்குப் பணிவிடை செய்து என் காலத்தைக் கழிப்பேன். இறைவனே நீங்கள் தான் என் கணவர் என்று காட்டிய பின், நான் எங்கு செல்லமுடியும்?. என்றாள் உறுதியாக.
அவர்கள் கருத்தொருமித்த தம்பதியராக வாழ்ந்தனர். ஜயதேவர், "கீதகோவிந்தம் பாடல் எழுதுவார். தினமும், கண்ணனைக் குறித்து கற்பனைக்குதிரையை ஓட்டுவார்.
""கிருஷ்ணருக்கு ராதாவின் மீது கொண்ட காதல் விஷம் போல தலைக்கேறி விட்டது. பூந்தளிர் போன்ற ராதையின் கால்களை, கிருஷ்ணரின் தலையில் வைத்தால் தான் அந்த விஷம் இறங்கும், என்று எழுத நினைத்தார்.
ஆனால், எழுதமுடியாமல் கை நடுங்கியது. எனவே அந்தக் கருத்து வேண்டாம் என்று எண்ணி, மனைவியிடம் சுவடியைக் கொடுத்து விட்டு, கிருஷ்ணருக்கு பூஜை செய்தார். சற்று ஓய்வெடுத்தார்.
மீண்டும் எழுத சுவடியை எடுத்தார்.
அவர் வேண்டாமென நினைத்த வரிகள் அதில் இடம்பெற்றிருந்தன.
""பத்மாவதி! நான் வேண்டாம் என நினைத்த வரிகளை யார் இதில் எழுதியது? என்று கோபமாகக் கேட்டார்.
""நீங்கள் தானே எழுதியிருக்க முடியும்! உங்களின் எழுத்து தானே இது! என்றாள் பத்மாவதி. உற்றுப்பார்த்தால், ஜயதேவரின் கையெழுத்து அப்படியே இருந்தது.
அந்த கிருஷ்ணனே எப்படியோ வந்து அதை எழுதியிருக்கிறான் என்று உணர்ந்தார்.
""கிருஷ்ணா! பக்தையான ராதையின் பாதங்களை தலை மீது வைத்துக் கொள்வதில் அவ்வளவு ஆனந்தமா உனக்கு! என்று பரவசம் கொண்டார்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar