|
ஒரு அரண்மனைகஜானாவில், விலை மதிக்க முடியாத வைரக்கல் ஒன்று இருந்தது. மன்னன், அதை பார்க்கும் போதெல்லாம் பெருமிதம் கொள்வான். ஒருநாள் ராணியுடன் பேசிக் கொண்டே, அந்த வைரத்தை எடுத்தான். எப்படியோ கை தவறிக் கீழே விழுந்து, பெரிய கீறல் விழுந்து விட்டது. வைரத்தின் அழகே போய் விட்டதே என அவன்பதறினான்.இந்த வைரத்தில்மட்டுமல்ல! என்மனதிலேயே கீறல் விழுந்தது போலாகி விட்டது, என புலம்பினான். நாட்டிலுள்ள பொற்கொல்லர்களை எல்லாம் வரவழைத்து அதை சரி செய்யலாமா என ஆலோசித்தான். வைரத்தை சரி செய்ய முயன்றால், இன்னும் விரிசலாகி விடும், என அனைவரும் மறுத்து விட்டனர். ஒரு ஏழை பொற்கொல்லர் இதுபற்றி கேள்விப்பட்டார். மன்னனை அணுகி, இந்தக் கீறலை என்னால் சரிசெய்ய முடியும், என்றார்.வைரத்தை சரி செய்து விட்டால் தக்க சன்மானம் அளிக்க நான் ஏற்பாடு செய்கிறேன், என்றான் மன்னன். இரண்டு நாள் கழித்து பொற்கொல்லரைப் பார்க்கச் சென்றான்.அவனிடம் ஒரு பேழையை திறந்துகாட்டினார் பொற்கொல்லர். வைரத்தின் கீறலை காம்பு போல மாற்றி, அதன் மேல் உடையாமல் இருந்த பகுதியை ரோஜா போல செதுக்கியிருந்தார் அவர். மன்னன் முகத்தில்ஏக சந்தோஷம். பிரச்னைக்குரிய விஷயம் என்று உலகில் எதுவுமே இல்லை, மாற்றி யோசிக்கும் போது,அந்த பிரச்னையேசந்தோஷத்திற்கான அஸ்திவாரமாகிவிடுகிறது. |
|
|
|