Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » அளவு மீறி ஆசைப்பட்டாதீர்
 
பக்தி கதைகள்
அளவு மீறி ஆசைப்பட்டாதீர்

ஒரு ஆற்றில் ஏக வெள்ளம். ஒருவன் அக்கறைக்கு அவசியம் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம். கையில் பணப்பை இருந்தது.படகுகள் நின்றன. அதில் ஏறினால், படகுக்காரன் ஐந்து ரூபாய் கேட்பானே! மிச்சம் பிடிக்கலாம்! என நினைத்து, அசட்டு தைரியத்தில் ஆற்றுக்குள் இறங்கி நடக்க ஆரம்பித்தான்.
ஓரிடத்தில் சுழலில் சிக்கினான். பணப்பை அடித்துச் செல்லப்பட்டது. ""ஐயையோ! என் பணத்தைக் காப்பாத்துங்க! என்று கத்தினான். அந்த சமயத்தில் அங்கு நீச்சலடித்து வந்த இளைஞன், வேகமாய் நீந்தி பணப்பையை எடுத்துக்கொண்டு கரையேறினான்.
அங்கே சிலர் நின்றனர்.
""யாரப்பா! பணப்பையை தவற விட்டது! பிடியுங்க! என்றான். யாரும் அது தங்களுடையது இல்லை என்றனர். அப்படியானால், பணத்தை தவறவிட்டவன்...அவன் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தது தெரிய வந்தது.
""ஐயையோ! பணத்தைக் காப்பாற்று என்று சொன்னவன், "எனக்கு நீச்சல் தெரியாது, என்னைக் காப்பாற்று என்று சொல்லியிருந்தால், அவனைக் காப்பாற்றியிருப்பேனே! என்று வருத்தப்பட்டான்.பார்த்தீர்களா! பணத்தாசை உயிரையே குடிக்கிறது. சம்பாதிக்க வேண்டியது தான்! ஆனால், அளவுக்கு மீறிய ஆசையால், உயிருக்கே ஆபத்தை வரவழைத்துக் கொள்ளக்கூடாது! புரிகிறதா!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar