|
ஒரு பணக்காரருக்கு ஒரே மகள். ஆசாமி எச்சில் கையால் காகம் ஓட்டாத கஞ்சப்பிரபு. ஒருசமயம், அந்தப்பெண் கடும் நோய்வாய்ப்பட்டாள். பெரிய டாக்டரிடம் போனால், அதிகம் செலவாகுமென, உள்ளூர் வைத்தியரிடம் காட்டனார். வியாதி அசையவில்லை. வேறு வழியில்லாமல், பெரிய டாக்டரிடம் போனார். அவரும் கைவிரித்து விட்டார். சொத்துக்கு ஒரே வாரிசான மகள் இறந்து போனால், தன் பணத்தை உற்றாரும், ஊராரும் கொள்ளையிட்டு விடுவார்களே என பயந்த பணக்காரர், ஒரு துறவியை வரவழைத்தார். ""சுவாமி! இவள் பிழைத்தாக வேண்டும்! ஏதாச்சும் வழி சொல்லுங்க என்றார். ""நீ இவளுக்கு வியாதி தீரும் வரை தினமும் பகவத்கீதை பாராயணம் செய்ய வேண்டும். அல்லது ஊருக்கே அன்னதானம் செய்ய வேண்டும், என்ன செய்யப் போகிறாய்? என்றார். ""நான் கீதையே பாராயணம் செய்துவிடுகிறேன், என அவசரமாகச் சொன்னார் பணக்காரர். ""அடப்பாவி! ஒரு நல்ல தகப்பனாக இருந்திருந்தால் இரண்டையுமே செய்கிறேன் என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும். தானம் கொடுப்பதால், என் மகள் பிழைப்பாள் என்றால் எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்கிறேன் என சொல்லியிருக்க வேண்டும். நீ பணத்தை மட்டுமே விரும்புகிறாய். என்னால் ஏதும் செய்ய முடியாது, என சொல்லிவிட்டு போய்விட்டார். அந்தப்பெண் உயிரிழந்தாள். பணக்காரரின் சொத்து சொந்தங்களிடம் சிக்கி சின்னாபின்னமானது
|
|
|
|