|
எம்பார் சுவாமி என்ற வைணவ ஆசார்யர் ஸ்ரீரங்கத்தில் காலட்சேபம் செய்தார். பலர் வந்தனர். ஒருவர் மட்டும் வர மறுத்து, வீட்டுத்திண்ணையிலேயே உட்கார்ந்து கொண்டார். "அங்கே வந்தால் நல்ல விஷயங்கள் காதில் விழுமே, வாருமே! என்று பலர் வற்புறுத்தியும் அவர் காதில் விழவில்லை. ஒருநாள் விடாப்பிடியாக அவரை இழுத்து வந்துவிட்டனர். மறுநாளில் இருந்து அவர் தான் முதல் ஆளாக வந்தார். காலட்சேபம் துவங்கும் முன்பே வந்து காத்திருந்தார். ""இவரது இந்த மாற்றத்துக்கு காரணம் இவரை வற்புறுத்தி அழைத்து வந்தவர்கள் தான் காரணம், என்பவர்கள் கை தூக்கலாம் என்றார் எம்பார். சிலர் கை தூக்கினர். ""சரி...நீங்கள் அழைத்தாலும், மனம் மாறி வந்த அவரே தான் காரணம் என்பவர்கள் கை தூக்கலாம், என்றார். அதற்கும் சிலர் கை தூக்கினர். ""இல்லை...இல்லை...இங்கே கதை சொல்பவர் மிக அழகாகச் சொல்கிறார். அதனால் தான் இவர் வந்தார் என்பவர்கள் கை தூக்குங்கள், என்றார். அதற்கும் சிலர் கை தூக்கினர். கடைசியாக எம்பார் சுவாமியே கை தூக்கினார். ""நான் கேட்காத ஒரு கேள்வி இருக்கிறது. இவர் இங்கு வர காரணம் இந்த மூன்றுமே அல்ல! வர மறுத்த ஒருவர் இங்கு வருகிறார் என்றால், அந்த புத்தியை கடவுள் தான் கொடுத்திருக்கிறார், என்றார். கடவுளால் மட்டுமே மனிதனுக்கு நல்லபுத்தியைக் கொடுக்க முடியும்
|
|
|
|