Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » விரதத்துக்கும் அளவீடு இருக்கு!
 
பக்தி கதைகள்
விரதத்துக்கும் அளவீடு இருக்கு!

புத்தர் ஒரு மரத்தடியில் அமர்ந்து தவம் செய்து கொண்டிருந்தார். தான் பார்த்த உயிரற்ற உடல், முதுமை... இதற்கெல்லாம் என்ன காரணம் என்பது பற்றி அறிவதற்கான கொடிய தவம் அது. உண்ணவில்லை, உறங்கவில்லை. உணர்வு நிலை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டிருந்தது.
அப்போது, ஒரு குழுவினர் பாடியபடியே அந்த மரத்தைக் கடந்தனர். அந்த பாட்டுச்சத்தம் அவரது தவத்தைக் கலைத்தது.
""வீணையின் நரம்பினை
முறுக்கினால் இசை வரும்!
முறுக்காத நரம்பினால்
என்றுமே பலனில்லை!
அதிகமாய் முறுக்காதே
நரம்புகள் அறுபடும்!
அளவோடு முறுக்கிடு
வாழ்வும் அது போலே!
என்ற பொருள்படும்படியாக அந்தப் பாடல் அமைந்தது.
இந்தப் பாடல் புத்தரின் சிந்தனையைக் கிளறியது. ஒன்றை அறிய அளவுக்கு மீறிய தவம் தேவையில்லை. ஏனெனில், ஒரேயடியாக பட்டினி கிடந்து மூச்சடக்கி தவம் செய்தால் இந்த உயிர் பறந்து விடும். பின், என்ன காரணத்துக்காக தவமிருந்தோமே, அந்த லட்சியம் நிறைவேறாமல் போய்விடும் என உணர்ந்தவர், தவத்தின் கடுமையைக் குறைத்துக் கொண்டார்.
நம் அன்றாட வாழ்வில் அனுஷ்டிக்கும் விரதங்களுக்கு கூட ஒரு அளவீட்டை வைத்துக் கொள்வது நல்லது. அளவுக்கு மிஞ்சினால் விரதமும் விஷம் தானோ!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar