|
ஒரு துறவி பொய் சொல்வதில் சமர்த்தர். ""நான் காசி போனேன், பத்ரிநாத் போனேன், அங்கே அதிசயங்களைக் கண்டேன், என்றெல்லாம் பொய் சொல்வார். ஒருமுறை ஒரு பெண் அவரிடம் ஆசிபெற்றாள். அவளிடம்,""அம்மா! நான் மகாமகா சந்நியாசி, சமீபத்தில் தான் பத்ரிநாத்தில் இருந்து வந்தேன், என்றார். ""அப்படியா! என்றவள், ""பத்ரியில் நீங்கள் பார்த்த விசேஷத்தைச் சொல்லுங்களேன், என்றாள். ""அம்மா! அங்கே நான்கு மைல் உயரமும், மூன்று மைல் அகலமும் கொண்ட ஒரு கீரைத்தண்டைப் பார்த்தேன், என்றார் துறவி.அவரது பொய்யை பொய்யாலேயே திருத்த விரும்பிய பெண்,""இதென்ன பிரமாதம்! நான் கேதார்நாத் போயிருந்தேன். அங்கே, ஒரு குயவர் பத்து மைல் நீளமும். ஆறு மைல் அகலமும் கொண்ட சட்டியை பலர் முன்னிலையில் செய்ததைப் பார்த்தேன், என்றாள். ""அவ்வளவு பெரிய சட்டியா! நம்ப முடியவில்லையே! என்ற துறவியிடம், ""உம்...நீங்க பார்த்த அந்த கீரைத்தண்டை சமைக்க அவ்வளவு பெரிய சட்டி தானே சரியாக இருக்கும், என்றாளே பார்க்கலாம். துறவி கப்சிப் ஆகி விட்டார். யாரிடமும் பொய் பேசாதீங்க! பேசினா ஒருநாள் வசமா சிக்கிக்கிடுவீங்க!
|
|
|
|