|
ஒருமுறை இளைஞன் ஒருவன் ஞானி ஒருவரை
சந்தித்தான். சுவாமி! என் மனதில் எப்போதும் குறை இருந்து கொண்டே
இருக்கிறது. அதனை நீக்க வழி ஒன்று சொல்லுங்கள் என்று கேட்டான். பாலுக்கு
சர்க்கரை போதாதென்பான் சக்கரை நோயாளி; தூக்கம் வரவில்லை என்பான் பணக்காரன்,
நிரந்தர வீடில்லை என்று வருந்துவான் ஏழை; முள் குத்தி வேதனைப்படும்
காலுக்குச் செருப்பில்லையே என்பான் உழைப்பாளி. இப்படி மனக்குறை
இல்லாதவர்கள் என்று யாரும் இருக்கமுடியாது. ஏன் எனக்கே இறைவனை தரிசிக்க
முடியவில்லையே என்ற மனக்குறை உள்ளது. இருப்பதைக் கொண்டு திருப்தி அடைவதே
மனக்குறை நீங்க ஒரே வழி என்று கூறினார் ஞானி. |
|
|
|