|
யோகி ஒருவரிடம், சுவாமி! நம்பிக்கை எவ்வளவு சக்தி வாய்ந்தது என்று கூறுங்கள் என்று கேட்டான் ஒருவன். தம்பி! சீதையை மீட்க ராமபிரான் இலங்கைக்குப் போய்ச் சேர, சமுத்திரத்தில் அணைபோட வேண்டியிருந்தது. ஆனால் அவருடைய பரம பக்தனான அனுமன், ராமபிரானிடம் கொண்ட திட பக்தியினால் சமுத்திரத்தை ஒரே தாண்டாய்த் தாண்டிவிட்டான். இதில் எஜமானைக் காட்டி<லும் சேவகனே அதிகமான காரியத்தை சாதித்தான். காரணம் ராமர் மீது கொண்ட நம்பிக்கை. ஆகவே நம்பிக்கை எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை புரிந்து கொண்டாயா என்று விளக்கினார் யோகி. |
|
|
|