|
திருவண்ணாமலையில் பக்தர்கள் ஓர் அழகான தோட்டத்தை உருவாக்கினார்கள். சில பசுக்கள் தோட்டத்தில் நுழைந்து செடிகளைத் தின்றுவிட்டன. பக்தர்கள் வருந்தி ஸ்ரீரமணரிடம் புகார் செய்தனர். ஸ்ரீரமணர், பசுக்கள் அழித்துவிட்டன என்று சொல்கிறீர்களே, இந்த இடத்தில் மேய்வது அவற்றின் இயல்பு. தோட்டத்திற்குள் மாடுகள் வந்து மேயக் கூடாது என்று உங்களுக்குத் தோன்றியிருந்தால் நீங்கள் வேலியிட்டுக் காப்பாற்றியிருக்க வேண்டும். செய்ய வேண்டியதைச் செய்யாமல் மாடுகளிடம் கோபித்தால் என்ன அர்த்தம்? என்றார் சிரிப்புடன்.
|
|
|
|