Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » நவராத்திரி பூஜை செய்த ராமர்
 
பக்தி கதைகள்
நவராத்திரி பூஜை செய்த ராமர்

ராமபிரான் அரசை இழந்து 14 ஆண்டுகள் கானகம் சென்றது அனைவரும் அறிந்ததே. ராவணன், சீதாதேவியை அபகரித்துக் கொண்டு போனதை அறிந்த ராமர் பெருந்துயரில் ஆழ்ந்தார். அப்போது மகதி என்னும் வீணையை மீட்டியபடி நாரதர் வந்தார். நாரதர் அமர்ந்ததும் ராமரும் லட்சுமணரும் அவர் அருகே அமர்ந்து பேசத் தொடங்கினர். ராகவா நடந்தது அனைத்தும் நான் அறிவேன். நான் சொர்க்க கோலம் சென்றபோது அங்கு நடத்த சில விவரங்களைத் தெரிந்து கொண்ட பின்னர்தான் உன்னைச் சந்திக்க வந்தேன். அதை அப்படியே உன்னிடம் தெரிவிக்கிறேன். தனக்கு மரணம் வரும் என்பது தெரியாமலே ராவணன் சீதையைக் கவர்ந்து சென்று விட்டான். அவனை சம்ஹாரம் செய்வதற்காகவே நீ இப்பூவுலகில் அவதரித்து இருக்கிறாய். ராவணன் சீதையிடம் கொண்ட மோகம் பூர்வ ஜென்ம வினையால் ஏற்பட்டது.

போன பிறவியில் சீதை தவத்தில் சிறந்த முனிவர் ஒருவரின் மகளாகப் பிறந்து வளர்ந்து வந்தாள். தவம் கொண்ட ராவணன் பலாத்காரமாக அவள் கரத்தைப் பிடித்து இழுத்தான். தனக்கு மனைவியாகும்படி வற்புறுத்தினான். கோபம் கொண்ட சீதை, துஷ்டனே! உன்னைக் கொல்வதற்காகவே நானே கர்ப்பவாசம் இல்லாமல்(அயோ நிஜையாக) அவதரிப்பேன். உன்னால் தொடப்பட்ட இந்த உடலை இனியும் வைத்திருக்க மாட்டேன் என்று கூறி தீயில் விழுந்து தன் உயிரை மாய்த்துக் கொண்டாள்.
அப்படிபட்ட கற்புக்கரசியை ராவணன் அபகரித்துக் கொண்டு போயிருக்கிறான். தன் குலம் அனைத்தும் நாசமடைவதற்காகவே இதைத் செய்தான். தேவர்களின் பிராத்தனைக்காக நீயும் அஜமகராஜன் பரம்பரையில் ராவண சம்ஹாரத்துக்காகவே அவதரித்து இருக்கிறாய்.

ராமா! சீதையைப் பற்றி கவலை கொள்ளாதே! சீதை அசோக வனத்தில் உன்னையே நினைத்துக் கொண்டிருக்கிறாள். தேவேந்திரன் காமதேனுவின் பாலை ஒரு பாத்திரத்தில் இட்டு அவளுடைய உணவுக்காக அனுப்பி இருக்கிறான். அதை அருந்தி சீதை பசி தாகம் இல்லாமல் இருக்கிறாள். நானும் பார்த்தேன். நீ தைரியமாக இரு!. உன் துயர் தீர நவராத்திரியில் விரதம் கடைபிடித்து தேவியை வழிப்பட்டால் அவள் அருளைப் பெறலாம். அது எல்லாவித சித்திகளையும் கொடுக்கும். இந்திரன். விசுவாமித்திரர், காசியபர், வசிஷ்டர் முதலானவர்கள் எல்லாம் நவராத்திரி விரதம் இருந்து அம்பிகையை பூஜித்து வேண்டியதை பெற்றார்கள்.
விதிப்படி இந்த விரதத்தைச் செய்தால் ராவணனை வதம் செய்வதற்கு உரிய ஊக்கம் பிறக்கும் என்று கூறி முடித்தார் நாரதர்.

நாரத பிரபோ! தாங்கள் எல்லாம் அறிந்தவர். மகத்தான சக்தி பெற நவராத்திரி விரதம் எப்படி அனுஷ்டிப்பது? தேவி என்ன உருவம் கொண்டவள்? என்ன பெயர் உள்ளவள்? என்ன பெருமை படைத்தவள்? என்று கேட்டார் ராமர். ராமா! என்னால் சொல்லப்படுகிற தேவி எக்காலத்துக்கும் இருக்க கூடிய ஆதி சக்தி. சகலவிதமான விருப்பங்களையும் நிறைவேற்றி வைப்பவள். எல்லோராலும் பூஜிக்கத் தகுந்தவள். என் தந்தையான பிரம்மதேவரிடம் திருஷ்டி சக்தியாக இருக்கிறாள். மகாவிஷ்ணுவிடம் பரிபாலிக்கும் சக்தியாக இருக்கிறாள். ருத்ரனிடம் சம்ஹார சக்தியாக இருக்கிறாள். பிரம்மதன் முதலான பலரும் அவளைப்பற்றி துதித்து இருக்கிறார்கள். அவற்றுக்கெல்லாம் அளவே கிடையாது என்றார் நாரதர்.

மகரிஷியே! தேவி விரதத்தின் விதிமுறைகளை கூறுங்கள். அதைக் கடைப்பிடித்து அவள் அனுகிரகத்தைப் பெற வேண்டும். ராமா! நானே முன்னால் இருந்து இந்த பூஜையை நடத்தி வைக்கிறேன்! என்றார் நாரதர். கிஷ்கிந்தையில் ஒரு மலை உச்சியில் பூஜைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நாரதர் முன்னிலையில் முறைப்படி பூஜை தொடங்கப்பட்டது. ராமர் உபவாசமிருந்து பிரதமை முதல் பூஜையை நடத்தி வந்தார். அஷ்டமி தினத்தன்று நள்ளிரவு நேரத்தில் அம்பிகை சிங்க வாகனத்தில் எழுந்தருளி, ராமா! நீ செய்த இந்த பூஜையிலும் விரதத்திலும் நான் மகிழ்ச்சி அடைந்தேன். உனக்கு உதவியாக என் சக்தி அம்சத்தை வழங்குகிறேன் என்று கூறி மறைந்தாள். ராமர் அக மகிழ்ந்த நவராத்திரி விரதத்தை பூர்த்தி செய்து நாரதருக்கு நன்றி தெரிவித்தார். ராகவா! உனக்கு வெற்றியும் மங்கலமும் உண்டாகட்டும் என்று ஆசி கூறி நாரதர் அங்கிருந்து போனார். இதிலிருந்து ராமரும் நவராத்திரியில் சக்தியை வழிபட்டதால் வெற்றி பெற்றார் என்று அறிய முடிகிறது.
ராமர் நவராத்திரி விரதத்தைக் கடைப்பிடித்த விவரம் தேவி பாகவதத்தில் கூறப்பட்டிருக்கிறது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar