|
துறவி ஒருவருடன் சீடர்கள் சிலர் காட்டு வழியே நடந்துப் போய்க் கொண்டிருந்தார்கள். அப்போது எதிரே ஒரு புலி வருவதைப் பார்த்து அனைவரும் நடுங்கினர். அவர்களில் ஒருவன் நம் குருதேவர் ஆற்றல் மிக்கவர். அவரது பெயரைச் சொன்னாலே நாம் தப்பித்து விடலாம்..! என்றான். அனைவரும் அப்படியே சொன்னதில், புலி பாய்ந்து ஓடி விட்டது.
இந்த செய்தி துறவியின் காதுகளை எட்டியது. மற்றொருநாள் துறவி காட்டில் தனியே நடந்து சென்று கொண்டிருந்தார். காட்டு நாய் ஒன்று அவரது எதிரே வந்தது. அதைப் பார்த்த துறவி பெயருக்கே பெரும் ஆற்றல் இருக்கும் தன்னை நாய் என்ன செய்ய முடியும் என நினைத்தார். நாயை நெருங்கி, உம் ஓடிவிடு என கர்வமாகக் சொன்னார். மறு நிமிடம் அவர் மீது பாய்ந்து கடித்து குதறியது நாய். சீடர்களை புலி ஒன்றும் செய்யவில்லை. ஆனால் குருவை மட்டும் ஏன் நாய் கடித்தது என்று குழப்பமாக உள்ளதா? சீடர்கள் குருவின் மீது உண்மையான பக்தி வைத்திருந்தனர். அதனால் புலி அவர்களை ஒன்றும் செய்யவில்லை. ஆனால் குருவோ தான் என்ற அகந்தையுடன் இருந்தார். அதனால் நாய் கடித்தது. தான் என்ற அகந்தையை அழித்து உண்மையான பக்தியுடன் இருங்கள்.
|
|
|
|