|
பெரும்பணக்காரர் ஒருவர், ஞானி ஒருவரிடம் வந்து, சுவாமி.. எனக்குச் சொந்தமான பெருட்கள் திருட்டு போய்விட்டன.. அதனால் என் நிம்மதி போய்விட்டது.. நீங்கள் தான் அவை திரும்பக் கிடைக்க வழி சொல்ல வேண்டும்..! என வேண்டினார். திருட்டுப் போனவை நிஜமாகவே உன்னுடையவைதானா...? கேட்டார் ஞானி. ஆமாம் அவை எல்லாமே என்னுடையவைதான்...என்று கோபமாகச் சொன்னார் செல்வந்தர். அவற்றை நீ பிறந்த÷õ அல்லது போகும்போது எடுத்துப் போவாயா? சிலகாலம் மட்டுமே உன்வசம் இருக்கப் போகும் பொருள்களை உனக்குச் சொந்தம் என்றும் அவற்றில்தான் உனக்கு நிம்மதி எனவும் சொல்கிறாயே அது எப்படி? அமைதியாகக் கேட்டார் ஞானி. சுவாமி சொன்னதின் உண்மையைப் புரிந்த செல்வந்தார் அமைதியாக அவ்விடத்தை விட்டுச் சென்றார். |
|
|
|