|
மகாராஷ்டிராத்தில் வாழ்ந்த மகான்களில் ஒருவர் ஏகநாதர். தினந்தோறும் கோதாவரியில் நீராடுவது அவரது வழக்கம். ஒரு நாள் நீராடி விட்டு திரும்பிவரும் வழியில் நாத்திகன் ஒருவன் தன் வீட்டு மாடியிலிருந்து ஏகநாதரின் தலையில் வெற்றிலை எச்சிலைத் துப்பினான். அவர் அதைக் கண்டு கொள்ளாமல் அமைதியாகத் திரும்பிச் சென்று ஸ்நானம் செய்தார். திரும்பவும் அவர் நாத்திகனது வீட்டைத் தாண்டிய போது அவன் எச்சிலைத் துப்பினான். மறுபடி ஸ்நானம் செய்தார் ஏகநாதர். 108 முறை இவ்வாறு நடந்தது. அதன் பின்பு தான் நாஸ்திகன் ஏகநாதரது பெருமையை உணர்ந்தான். அவரது பாதங்களில் வீழ்ந்து நமஸ்கரிதான். அவரிடம் மன்னிப்புக் கோரினான். அவன் கூறியதைக் கேட்ட ஏகநாதர், அப்பா, உண்மையில் நமஸ்கரிக்கத் தகுந்தவன் நீதான். உன்னால்தான் இன்று எனக்கு கோதாவரியில் 108 முறை ஸ்நானம் செய்த புண்ணியம் கிடைத்தது என்றார். மகான்கள் தம்மை அற்பமாகவும், மற்றவர்களைப் பெரியவர்களாகவும் கருதுவார்கள். நாமும் இறைவனருளால் பொறுமையை வளர்க்கப் பாடுபட வேண்டும்.
|
|
|
|