|
துகாரம் ஒரு சிறந்த பக்திமான். பகவானுக்கும், மக்களுக்கும் சேவை செய்வதே இவரது பணி. பகவானின் திவ்யநாமத்தின் பெருமையை அவர் தமது வாழ்வில் பலமுறை நிரூபித்துக் காட்டியுள்ளார். ஒரு நாள் பக்கத்துப் பக்கத்து வீட்டில் வசித்த பெண்களுக்குள் பலத்த சண்டை வந்து விட்டது. அவர்கள் இருவருக்கும் ஒன்றாகச் சேர்ந்து ஒரே இடத்தில் வறட்டி தட்டினார்கள். உலர்ந்த பின் அவை ஒன்றோடொன்று கலந்துவிட்டன. யாருடையது எவ்வளவு என்று தெரிந்துகொள்ள முடியாமல் சண்டை வந்து விட்டது. துகாராம் அந்த வழியாகப் போனார். அவர் விஷயத்தைக் கேட்டபின்பு வறட்டிகளைப் பிரித்துக் தருவதாகச் சொன்னார். எல்லா வறட்டிகளும் அவர் முன்குவிக்கப்பட்டன. அவர் ஒவ்வொன்றாகக் காதில் வைத்துப் பார்த்து, இரண்டாகப் பிரிந்தார். பிறகு, அம்மா! இருவரில் யார் வேலை செய்யும்போது விட்டல் விட்டல் என்று கூறினீர்கள்? என்று கேட்டார். நாமம் சொல்லிக்கொண்டே வறட்டி தட்டிய பெண்முன்னால் வந்தாள் அம்மா! இடப்பக்கம் உள்ள குவியல் உன்னுடையது. வலப்பக்கம் உள்ளது மற்றவளது என்றார். வேடிக்கை பார்க்க கூடியிருந்தோர் சுவாமி, இது எப்படி? என வினைவினர்.
நாம் இறைவனின் திருநாமம் சொல்லும்போது, நாம அலைகள் சுற்றுப்புறம் முழுவதும் பரவும். நாம அதிர்வுகள் இந்த வறட்டிகளில் உள்ளன. அதைக் கேட்டு அவற்றைப் முடிந்தது என்றார் துகாராம். நாமஜபம் செய்ய இடம் நேரம் பார்க்க வேண்டியதில்லை. நாமஜபம் நமக்கு நன்மை செய்வதோடு சுற்றுச் சூழ்நிலையையும் தூய்மையாக்குகிறது. நாம் இடைவிடாமல் நாமஜெபம் செய்தல் வேண்டும்.
|
|
|
|