|
ஒரு ஆசிரமத்தில் துறவி ஒருவர் சீடர்களுடன் வாழ்ந்து வந்தார். அவர்கள் அடிக்கடி இறைவன் எங்குள்ளான்? என்று துறவியிடம் கேட்டுக் கொண்டிருந்தனர். துறவியின் பக்தர் ஒருவர் ஒருநாள் தனது தோட்டத்தில் விளைந்த சுவைமிகுந்த மாம்பழங்களைக் கொண்டு வந்து அவரிடம் அளித்தார். மாம்பழங்கள் அனைத்தையும் சீடர்களுக்குப் பகிர்ந்தளித்த துறவி, நீங்கள் இவற்றை இறைவன் திருமுன்புதான் சாப்பிட வேண்டும் என்று நிபந்தனையையும் விதித்தார்.
இதைக் கேட்ட சீடர்களில் சிலர் பூஜையறைக்குச் சென்று சாப்பிட, வேறு சிலர் ஆலயத்திற்குச் சென்று சாப்பிட்டனர். மற்றும் சிலர் எல்லா இடங்களிலும் இறைவன் இருக்கிறான் என்று சொல்லி, ஆசிரமத்திலேயே சாப்பிட்டனர். மீதி இருந்தவர்கள் குருதான் தெய்வம் என்று கூறி துறவியை வணங்கி பழங்களை உண்டனர். அனைவரும் பழங்களைச் சாப்பிட்டு வந்த பின்பு, சீடர்களே ஒரு எளிய மாம்பழத்தை இறைவன் முன்பு சாப்பிடவேண்டும் என்ற நிபந்தனையை நிறைவேற்ற நீங்கள் பல வழிமுறைகளைக் கடைப்பிடித்ததைப் போல இறைவனும் உங்கள் உள்ளத்தில் அவரவர் விரும்பிய வண்ணமே நிறைந்து உள்ளான் என்றார் துறவி.
|
|
|
|