|
பஞ்சபாண்டவர்கள் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டிருந்தபோது அந்தணர் ஒருவர் தானம் கேட்டு வந்தார். அந்தணரே! நாளை வாரும் எனக் கூறி, ஆலோசனையில் மூழ்கிவிட்டார் தருமர். உடனே அங்கிருந்த பீமன் முரசை எடுத்து வேகமாக அடித்து ஒலி எழுப்பினான். பீமா! ஏன் இப்போது முரசடித்தாய்? என்று தருமர் கேட்டார் அண்ணா! நீங்கள் காலத்தை வென்று விட்டீர்கள் அதைத் தெரிவிக்கவே முரசரைந்தேன்! என்று கூறினான் பீமன். என்ன சொல்கிறாய் பீமா? நான் காலத்தை வென்றேனா.......எப்படி? எப்போது? என்று வினவினார் தருமர். ஆமாம்! நாளை இருப்பது நிச்சயம் என்றுதானே அந்தணரை நாளை வரச்சொன்னீர்கள், ஆகவே நீங்கள் காலத்தை வென்றவர்தானே! என்று பீமன் விளக்கினான். நிலையான்மையை உணர்ந்த தருமர், அந்தணரை அழைத்த அப்போதே தானமளித்தார்.
|
|
|
|