|
கூட்டம் ஒன்றில் சாது ஒருவர் பொறுமையின் பெருமை குறித்துப் பேசிக் கொண்டிருந்தார். கேட்டுக் கொண்டிருந்தவர்களில் ஒருவனுக்கு, சாது கூட்டத்திற்காகத்தான் இப்படிப் பேசுகிறார். உண்மையில் இவர் பொறுமையைக் கடைப்பிடிப்பவர் இல்லை என்ற எண்ணம் எழுந்தது. மறுநாள் சாலை வழியே வந்து கொண்டிருந்த சாதுமீது வேண்டுமென்றே வேகமாக மோதினான். பின்பு ஏன் இப்படி கண்மண் தெரியாமல் வந்து மோதுகிறீர்கள்? என்று சண்டைக்கும் போனான். சாது மவுனமாக இருந்தார். அவனின் கோபம் அவரைச் சலனப்படுத்தவில்லை. மாறாக அவனிடம் அவர் அமைதியாகப் பேசினார். நாம் மோதிக் கொண்டதற்கு யாருடைய தவறு காரணம் என்று ஆய்வு செய்வதில் நேரம் கழிப்பது வீண் வேலை. நான் உங்கள் மீது மோதி இருந்தால் அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் மோதியிருந்தால் அதற்காக வருத்தப்படாதீர்கள் ஏனெனில் நான் அதைப் பொருட்படுத்தமாட்டேன் என்றார். அதைக்கேட்டு வெட்கிய அவன், சாதுவின் பாதம் பணிந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டான்.
|
|
|
|