|
ஒரே ஆசிரமத்தில் தங்கியிருந்த நான்கு சீடர்கள், குரு தல யாத்திரை சென்றிருந்த சமயம், நகரில் உபன்யாசம் கேட்கப் போவது பற்றி பேசிக்கொண்டனர். உபன்யாசம் கேட்க மூன்று பேர் புறப்பட்டனர். கலைப்பின் காரணமாக ஒரு சீடன் மட்டும் போகவில்லை. மூவருக்கும் சொற்பொழிவு நடக்குமிடம் சரியாகத் தெரியாமல் அதுபற்றி விவாதிக்க, வெளியே கிளம்ப முடியாத அந்த சீடன் இடத்தை சரியாகக் கூறினான். மகிழ்ச்சியுடன் புறப்பட்டுச் சென்று திரும்பி வந்த அவர்கள், ஆசிரமத்தில் ஒன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தபோது நள்ளிரவு பெய்த மழையால் ஆசிரமம் நால்வரும் காலமாகி, அனைவரும் நேரே சொர்க்கம் சென்றனர்.
அவர்களை வரவேற்ற ஒரு புண்ணியாத்மா நீங்கள் நேற்று கோயிலுக்குச் சென்று இறைவனின் லிலைகளைக் கேட்டீர்கள் அல்லவா! அதனால்தான் சொர்க்கம் வந்திருக்கிறீர்கள் என்றார். உடனே ஒருவன் ஐயா! நாங்கள் மூன்று பேர்தானே உபன்யாசம் கேட்கப் போனோம் இந்த நான்காமவன் வரவில்லையே! என்றான். நீங்கள் அங்கு செல்ல வழிகாட்டியவன் அவன் அல்லவா? உங்களுக்கு சொர்க்க பிராப்தி கிடைக்க உதவி இருக்கிறானே, அதற்கு பலன் இல்லாமல் போகுமா? அதன் பலன்தான் அவன் இங்கு வந்துள்ளான் என்றார் அந்த புண்ணியாத்மா.
|
|
|
|