|
ஒரு குருவிடம் குடும்பஸ்தர் ஒருவர் வந்து, குருவே....! வாழ்க்கையே எனக்கு வெறுத்து விட்டது. துறவி ஆவதற்கு எனக்கு ஆசை. ஏற்றுக் கொள்ளுங்கள்... முனிவர் சிரித்தார். ஆசையை விட்டு வா... அப்பனே...! ஆசைகளை விட்டு விட்டதால்தானே வந்திருக்கிறேன். எச்சுகமும் வேண்டாமெனத் தானே துறவியாக விரும்புகிறேன்...? துறவியாக வந்திருக்கிறேன் என்றா கேட்டாய்...? துறவியாக ஆசை என்றல்லவா...கேட்டாய்? குடும்பஸ்தருக்குப் புரிந்தது. எனக்கு துறவியாகும் தகுதியில்லை. நான் நல்ல குடும்பஸ்தனாகிறேன்... முதலில், ஆசைப்படக் கற்றுக் கொள்ளப்பா..! ஏன் குழப்புகிறீர்கள்... ஸ்வாமி..? முனிவர் விளக்கினார். சம்சாரியின் சராசரி நிலை ஆசைப்படுவது; துறவியின் நிலை ஆசையை விடுவது..! ஆசையில்லாதவன், ஆசைகளை வளர்க்காதவன் சம்சாரியாக வெல்ல முடியாது. ஆசையே உழைக்கும் ஆர்வம் வளர்க்கும்; நிறைவேற்றத் தூண்டும். ஆக, அதற்கு அப்படி; இதற்கு இப்படி... புரிகிறதா..? என்றார்.
|
|
|
|