|
ஒரு கிராமத்தில், மகாபாரத உபன்யாசம் நடைபெற்றுக்
கொண்டிருந்தது. உபன்யாசியோ, மிகச் சிறந்தவர்; சிந்திக்க வைப்பதில் வல்லவர்.
பக்தர்கள் கேட்டு மகிழ்ந்திருந்தனர். பாரதப்போரைத் தடுக்க கிருஷ்ணர் தூது
சென்றும், துரியோதனனால் தடுக்கப்பட்ட இடம் குறித்து உபன்யாசி
சொல்லிக்கொண்டிருந்தார். ஒரு சிறுவன் எழுந்தான், ஸ்வாமி...! கிருஷ்ணர்தானே,
பரந்தாமனின் அவதாரம். கம்சனைப் போல துரியோதனையும், கிருஷ்ணர் அங்கேயே
கொன்றிருந்தால் போரையே தவிர்த்திருக்கலாமே...? தர்மம் அங்கேயே
ஜெயித்திருக்குமே..? துடுக்காகக் கேட்டான். இதைக் கேட்ட உபன்யாசி
சிரித்தார்; அவன் கேட்டது நியாயமே..! ஆனால், பாரதத்திலும், ராமாயணத்திலும்
பரந்தாமன் எடுத்தது மனித அவதாரம். மனிதனுக்குண்டான வலி, வேதனை, இன்ப -
துன்பம் என யாவும் உணரும் அவதாரம். பரந்தாமனாயிருந்தாலும், அதர்மங்கள்
நடந்தால் அக்கணமே அழித்தால், அது அந்த அவதாரத் தத்துவத்தையே மீறுவதாகும்..!
ஆக, அதர்மத்தைக் கண்டா<லும், அதர்ம துரியோதனை கொல்லாதிருப்பதே
கிருஷ்ணரின் தர்மம்..! அதுவே பாரதப் போர் நடைபெறக் காரணம்...! குரு கூறிய
விளக்கம் சிறுவனுக்கும், மற்றவர்களுக்கும் புரிந்தது.
|
|
|
|