|
துறவிகள் இருவர் சிவபூஜைக்காக கங்கை நீரை கமண்டலத்தில் எடுத்துக் கொண்டு கோயிலுக்குச் சென்றனர். அவர்கள் செல்லும் வழியில் ஒருவன் மயங்கிக்கிடந்தான். அதனைக் கண்ட ஒரு துறவி, உடனே அவனைத் தூக்கி மடியில் போட்டு அபிஷேகத்திற்காக எடுத்து வந்த நீரை அவன் முகத்தில் தெளித்தும்; அருந்தக் கொடுத்தும் அவன் மயக்கத்தைத் தெளிவித்தார். அதற்கு இளந்துறவி, சிவன் அபிஷேகத்திற்காக எடுத்து வந்த நீரை அசுத்தப்படுத்திவிட்டீர்களே, சிவன் புண்ணியம் இனி உங்களுக்குக் கிடைக்காதே! என்று கூறினார். அதற்கு மூத்த ஞானி, சிவன் அபிஷேகத்திற்காக எடுத்து வந்த நீர் வழியில் ஒருவனின் உயிரைக் காப்பாற்ற <உதவியது பெரிய புண்ணியம் என்று நான் கருதுகிறேன். ஒரு வேளை அது பாவம் என்றால் அதன் பலனைப் பெறுவதில் எனக்கு எந்த வருத்தமுமில்லை. மக்கள் தொண்டே மகேசன் தொண்டு. அதன்படியே நடந்து கொண்டேன் என முடிக்க, இளம் துறவி மெய்சிலிர்த்தார். |
|
|
|